இஸ்லாமாபாத் : பாகிஸ்தானிற்கு 5 ஆயிரம் மெகாவாட்ஸ் வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக அங்கிருந்து வெளிவரும் பத்திரிகை நியூஸ் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி சமீபத்தில் தென்கொரிய தலைநகர் சியோலில் சந்தித்துப் பேசினர். அப்போது, பாகிஸ்தான் பிரதமர் கிலானி, மன்மோகன் சிங்கிடம் மின்பற்றாக்குறையால் தாங்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும், எனவே மின்உதவி செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில், 5 ஆயிரம் மெகாவாட்ஸ் மின்சாரம் வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.