சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியிடம் சில்மிஷம் சாத்தூரில் டி.இ.எல்.சி., விடுதி முற்றுகை

Added : ஏப் 07, 2012
Advertisement
மாணவியிடம் சில்மிஷம் சாத்தூரில் டி.இ.எல்.சி., விடுதி முற்றுகை

சாத்தூர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் செல்லியாரம்மன் கோவில் தெருவில் உள்ள, டி.இ.எல்.சி., குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படித்து வந்த மாணவி ஒருவரை, வார்டனின் கணவர் கற்பழித்ததாக வந்த செய்தியை அடுத்து, விடுதியை பொதுமக்கள் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் செய்தனர்.
டி.இ.எல்.சி., காப்பகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவியர் தங்கி, பல்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர். ஹாஸ்டல் வார்டன் நிர்மலா,58,வின் கணவர் தேவநேசன்,61 என்பவர், அங்கு தங்கி படிக்கும் மாணவியரிடம் சில்மிஷங்களில் ஈடுபட்டு வருவதாக, அப்பகுதியில் வசிக்கும் பெண்களிடம் மாணவியர் பலரும் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.


இந்நிலையில், விடுதியில் தங்கி படித்து வரும், 10ம் வகுப்பு மாணவி சுமதி,14 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தேவநேசனால் கற்பழிக்கப்பட்டு, கருதரித்து இருப்பதாகவும், இதை மறைக்க சுமதியை, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டதாகவும், தகவல் பரவியது. இதை தொடர்ந்து, நேற்று இரவு 7 மணிக்கு, விடுதியை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள், பெண் வார்டன், அவரின் கணவர், இருவரையும் கைது செய்யக்கோரி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சாத்தூர் டி.எஸ்.பி., சின்னையா பேச்சு வார்த்தை நடத்தினார். பெண் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். ஹாஸ்டல் வார்டன் நிர்மலா, அவரின் கணவர் தேவநேசன், இருவரையும் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்பகுதியில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X