சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தை கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட பாதிரியார் கைது

Added : மே 22, 2010 | கருத்துகள் (1)
Advertisement

கிருஷ்ணகிரி : குழந்தை கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்ட பாதிரியாரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக, மேலும் ஒரு பாதிரியாரை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரியில், கடந்த 18ம் தேதி, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பேரிகையை சேர்ந்த ராமக்கா என்பவரது நான்கு மாத ஆண் குழந்தையை கடத்தி சென்ற, கிருஷ்ணகிரி தனலட்சுமி மற்றும் சென்னையை சேர்ந்த கிரிஜா, அவரது கணவர் ஆட்டோ டிரைவர் சிவன் மற்றும் ராணி ஆகிய நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 2009 டிச., 4ம் தேதி, கிருஷ்ணகிரி ஆர்.எஸ்., லட்சுமிபுரத்தில் சாலையில் விளையாடிக்கொண்டிருந்த செல்வராஜ் மகன் தேவா (3) என்ற சிறுவனை, தனலட்சுமி கடத்தி சென்று கிரிஜாவிடம் கொடுத்தது தெரிந்தது. தனிப்படை போலீசார் சென்னை சென்று நடத்திய விசாரணையில், சென்னை பெரம்பூர் இரும்பூளியூர் பாதிரியார் அல்போன்ஸ் சேவியர் (48), குழந்தை கடத்தல் கும்பலுக்கு தலைவராக இருந்தது தெரிந்தது. மேலும் இவர், "ராஜரீக மக்கள் கட்சி' என்ற கட்சியை, ஓராண்டுக்கு முன் துவங்கி, கட்சியின் தலைமை செயலராக தன்னை அறிவித்து, கட்சிக்கு தமிழகம் முழுவதும் 19 மாவட்டங்களில் நிர்வாகிகளை தேர்வு செய்து உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டதும் தெரிந்தது.

குழந்தை கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளியான, பெரம்பூரில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த கிரிஜா, ராஜரீக மக்கள் கட்சியின் பெரம்பூர் பகுதி மகளிர் அணி தலைவியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கிரிஜாவுக்கும், அல்போன்ஸ் சேவியருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் 4ம் தேதி, கிருஷ்ணகிரியை சேர்ந்த சிறுவன் தேவாவை, தனலட்சுமி கடத்தி சென்று, தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோவில் வந்த சிவா, கிரிஜா மற்றும் ராணியிடம் கொடுத்துள்ளார்.

சிறுவன் தேவாவை, கிரிஜா அல்போன்ஸ் சேவியரிடம் கொடுத்துவிட்டு, முன் பணமாக 10 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். தேவாவை, அல்போன்ஸ் சேவியர், ராஜரீக மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலரான திண்டிவனம் இரட்டணியை சேர்ந்த பாதிரியார் செல்வம் (37) மூலம்,செஞ்சி தாலுகா, தேவதானப்பேட்டையை சேர்ந்த மாட்டு வியாபாரி மணி என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

இதையடுத்து, தேவதானம்பேட்டை சென்ற தனிப்படை போலீசார், மணி வீட்டில் இருந்த சிறுவன் தேவாவை மீட்டனர். மணி மற்றும் சிறுவனை விற்பனை செய்த பாதிரியார் செல்வம் ஆகியோர் தலைமறைவாகினர். மீட்கப்பட்ட சிறுவன் தேவா, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். குழந்தை கடத்தல் கும்பலின் தலைவராக செயல்பட்ட அல்போன்ஸ் சேவியரை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saravanan - chennai,இந்தியா
23-மே-201001:03:02 IST Report Abuse
 saravanan பசு தோல் போர்த்திய ஓநாய்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X