பொது செய்தி

இந்தியா

வரதட்சணை வழக்கில் உதவி கேட்ட இளம்பெண்ணுடன் மணிக்கணக்கில் "கடலை' போட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி

Added : ஏப் 15, 2012 | கருத்துகள் (11)
Advertisement
வரதட்சணை வழக்கில் உதவி கேட்ட இளம்பெண்ணுடன் மணிக்கணக்கில் "கடலை' போட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி

ஐதராபாத் :வரதட்சணைக் கொடுமை வழக்கில் உதவி கேட்டு வந்த பெண்ணுடன், மணிக்கணக்கில் போனில் பேசிய போலீஸ் அதிகாரி குறித்து விசாரணை நடத்த, அதிகாரிகளுக்கு ஆந்திர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


ஆந்திரா, குண்டூரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி கோபி பிரியா; இன்ஜினியர். இவர்களுக்கு, 2009ல் திருமணம் நடந்தது. கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து கோரி, குடும்ப நல கோர்ட்டில் கார்த்திக் மனு தாக்கல் செய்தார்.இதற்குப் போட்டியாக, தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கார்த்திக் மற்றும் அவரின் பெற்றோருக்கு எதிராக, கோபி பிரியா புகார் கொடுத்தார்.அப்போது, குண்டூர் ஊரக எஸ்.பி.,யான ஷியாம் சுந்தரிடம், இந்த விஷயத்தில் உதவும்படி கேட்டுக் கொண்டார். புகாரை விசாரிப்பதாக உறுதி அளித்த சுந்தர், கோபி பிரியாவுடன் அடிக்கடி தொலைபேசி மற்றும் மொபைல்போனில் பேசி வந்தார். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கார்த்திக், தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியை நாடி, போலீஸ் அதிகாரியுடன் எத்தனை மணி நேரம் கோபி பிரியா பேசியுள்ளார் என்ற விவரங்களை பெற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டார்.


அதிர்ச்சி பட்டியல்:துப்பறியும் நிறுவனமும், அவர் கேட்ட தகவலை திரட்டித் தந்தது. அதில், ஒவ்வொரு முறை போன் செய்யும் போதும், குறைந்தபட்சம் முப்பது நிமிடங்கள் கோபி பிரியாவுடன், போலீஸ் அதிகாரி ஷியாம் சுந்தர் பேசியுள்ளது தெரியவந்தது.இவ்வாறு, 80 நாட்களுக்கும் மேலாக, 166 முறை ஷியாம் சுந்தர், கோபி பிரியாவுடன் பேசியுள்ளார். நள்ளிரவு, அதிகாலை என, நினைத்த நேரத்தில் இருவரும் பேசி வந்துள்ளனர். கடந்த ஜனவரி 1 மற்றும் மார்ச் 20ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், இப்படி பேசியுள்ளனர்.தன் வீட்டிலிருந்து, 53 முறையும், தன் மொபைல்போனிலிருந்து 61 முறையும், தன் அலுவலகத்திலிருந்து 26 முறையும், தனது முகாம் அலுவலகத்திலிருந்து 26 முறையும், ஷியாம் சுந்தர் போனில் பேசியுள்ளார். அதேபோல், கோபி பிரியாவும், தன் பங்கிற்கு, 226 முறை போலீஸ் அதிகாரியை அழைத்து பேசியுள்ளார். இருவரும், 1,944 குறுஞ்செய்திகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.


விசாரணைக்கு உத்தரவு:இந்த அதிர்ச்சி தரும் பட்டியலை, தன் வழக்கறிஞர் மூலம் ஆந்திர ஐகோர்ட்டில் தாக்கல் செய்த கார்த்திக், போலீஸ் அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.மேலும், இந்த வழக்கில் மட்டும், போலீஸ் ஐ.பி.எஸ்., அதிகாரி தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தியது ஏன் என்றும், அவரது வழக்கறிஞர் புரு÷ஷாத்தமன் கேள்வி எழுப்பினார்.இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஆந்திர ஐகோர்ட் நீதிபதி சுபாஷ் ரெட்டி, அடுத்தவர் மனைவியுடன் மணிக்கணக்கில் போனில் பேசிய போலீஸ் அதிகாரி ஷியாம் சுந்தர் குறித்து விசாரிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - chennai,இந்தியா
16-ஏப்-201216:18:26 IST Report Abuse
sankar veliye payirai meinchurukku
Rate this:
Share this comment
Cancel
arun - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஏப்-201215:50:11 IST Report Abuse
arun இப்போதெல்லாம் பெண்கள் மிகவும் அட்வான்சாக செயல்படுகிறார்கள் .. இந்த பெண் divorce கிடைக்கும் முன்பே தனக்கு அடுத்த கணவரை தேட ஆரம்பித்து விட்டது ...
Rate this:
Share this comment
Cancel
Abdul Khader - RIYADH,சவுதி அரேபியா
16-ஏப்-201212:32:27 IST Report Abuse
Abdul Khader It is too bad for an IPS officer to behave in an indecent way. If the general public approach a high rank officer, that means, justice will be maintained even if lower rank officers act indifferently.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X