பொது செய்தி

இந்தியா

ரஞ்சிதா பட்ட வேதனை : நித்யானந்தா மன உருக்கம்

Added : ஜூலை 22, 2010 | கருத்துகள் (193)
Advertisement
ரஞ்சிதா பட்ட வேதனை : நித்யானந்தா மன உருக்கம்

பெங்களூரு : நடிகை ரஞ்சிதா நேர்மையான அடக்கமான பெண் என, சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் அமைத்து யோகக் கலையை போதித்து வருகிறார் நித்யானந்தா, சர்ச்சைக்குரிய வீடியோ காட்சியில் சிக்கி, சிறை சென்றார் இவரது சீடர் ரஞ்சிதா தலைமறைவானார். ஜாமீனில் வெளிவந்துள்ள நித்யானந்தா, ஆன்மிக போதனைகளை செய்ய கோர்ட் அனுமதியளித்துள்ளது.


பிடதி ஆசிரமத்தில் நேற்று நித்யானந்தா குறிப்பிடுகையில், "என் மீது செக்ஸ் புகார்கள் கூறப்பட்ட போது, அதைப் பற்றி நான் கவலைப்படவேயில்லை. ஆனால், எனது சீடர்கள் இதனால் பாதிக்கப்பட்டது குறித்து தான் வேதனைப்பட்டேன். குறிப்பாக, ரஞ்சிதா போன்றவர்கள் இந்த புகாரினால் வெகுவாக பாதிக்கப்பட்டார்கள். ரஞ்சிதா நேர்மையானவர், அடக்கமானவர். ஆசிரமத்தில் தலைசிறந்த சேவகியாக இருந்தவர். என்னை தாக்க நினைப்பவர்கள், என்னை பழிதீர்க்க நினைப்பவர்கள் நேரடியாக மோதட்டும். ரஞ்சிதாவுடன் நான் சல்லாபம் செய்வதாக "டிவி'யில் பல மணி நேரம் படம் போட்டு காட்டினார்கள். என் மீது சுமத்தப்பட்டுள்ள கற்பழிப்பு புகார் காரணமாக, 50 நாட்கள் சிறையில் இருந்தேன். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு போகட்டும். ஆனால், எனது பக்தர்களின் வாழ்வை, தவறான பிரசாரத்தால் பாழாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். ரஞ்சிதா எனது ஆசிரமத்துக்கு நிறைய பொதுத் தொண்டுகளை செய்துள்ளார். தவறான பிரசாரத்தால் அவரும், அவரது குடும்பத்தாரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக நான் எனது பிராத்தனையையும், வாழ்த்தையும் வழங்குகிறேன். இவ்வாறு நித்யானந்தா கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (193)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ப.சஞ்சீவிkumar - samusigapuram,இந்தியா
24-ஜூலை-201000:38:39 IST Report Abuse
ப.சஞ்சீவிkumar nalla samiyar avarapoie ellarum thitriga appati solluvenu neenaikathada nithyananyha
Rate this:
Share this comment
Cancel
g .kaliyaperumal - villupuram,இந்தியா
24-ஜூலை-201000:11:08 IST Report Abuse
g .kaliyaperumal ஞானம் பெற்றவர்கள் அடுத்தவர் உழைப்பில் வாழமாட்டார்கள் . நீ கட்டி இருக்கும் வேஷ்டி, தலை பாகை ,மூன்று vaaali உணவு , AC அறை,.......... முட்டாள் சீடர்களே புத்தரின் வாழ்கை வரலாற்றை படியுங்கள்.... ??????
Rate this:
Share this comment
Cancel
kaliyaperumalg - villupuramdist.panappakkam.,இந்தியா
24-ஜூலை-201000:03:50 IST Report Abuse
kaliyaperumalg தயவு செய்து தங்களுடைய வாழ்க்கையை வீணடிக்காதீர்கள். be good and do good....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X