ஹெட்லி தந்த தகவல்: அமெரிக்கா கவலை

Added : ஜூலை 23, 2010 | கருத்துகள் (6)
Share
Advertisement

வாஷிங்டன்: "டேவிட் ஹெட்லி தொடர்பான விவகாரத்தில், இந்தியா தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்' என, அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. மும்பை தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் -இ- தொய்பா அமைப்பைச் சேர்ந்த டேவிட் ஹெட்லியை, அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த தேசிய புலனாய்வு அமைப்பினர், சமீபத்தில் அமெரிக்கா சென்று ஹெட்லியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான விவரங்களை, மத்திய உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை பகிரங்கமாக அறிவித்ததாக சர்ச்சை எழுந்தது. குறிப்பாக, மும்பை தாக்குதலில் பாக்., உளவு அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக, ஹெட்லி கூறியதாக பிள்ளை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தால், இந்தியா மீது அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் கிரவுலியிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதை அமெரிக்கா உணர்ந்துள்ளது. டேவிட் ஹெட்லியிடம் நடத்தப்படும் விசாரணை குறித்த விவரங்கள் ரகசியத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை இந்தியாவும், அமெரிக்காவும் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளன. பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் இந்தியா, தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கிரவுலி கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJU - CHENNAI,இந்தியா
23-ஜூலை-201014:40:42 IST Report Abuse
RAJU அமெரிக்கா கோபப்பட்டால் நமக்கென்ன? I S I க்கு தொடர்புள்ளது தெளிவான போது நாம் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?
Rate this:
Cancel
ராம்குமார் - chennai,இந்தியா
23-ஜூலை-201011:02:20 IST Report Abuse
ராம்குமார் நல்ல செருப்பு அடி ....
Rate this:
Cancel
வை பொன்னுசாமி - tittagudi,இந்தியா
23-ஜூலை-201010:18:00 IST Report Abuse
வை  பொன்னுசாமி பயங்கரவதத்திற்க்கு எதிராக அமெரிக்காவை தவிர யாரும் கருத்து தெரிவிக்க கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X