“உயிரை பணயம் வைத்து கலெக்டரை மீட்பேன் ”- நெல்லையில் இருந்து புறப்பட்டார் வீரத்திருமகன்

Updated : ஏப் 30, 2012 | Added : ஏப் 30, 2012 | கருத்துகள் (11)
Advertisement
collector Alex Paul Menon abducted ; Nellai Proff., ready to go to forest, “உயிரை பணயம் வைத்து கலெக்டரை மீட்பேன் ”- நெல்லையில் இருந்து புறப்ப

திருநெல்வேலி: தனது உயிரை பணயம் வைத்தாவது கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் மேனனை நிச்சயமாக மீட்டு வருவேன் என சட்டீஸ்கர் சென்றுள்ள நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி முதல்வர் ஜோயல் தெரிவித்தார். சட்டீஸ்கரில் முதல்வர் ராமன்சிங்கை சந்தித்து விட்டு நமது நெல்லை நிருபருக்கு தொலை பேசி மூலம் சிறப்பு பேட்டியை அளித்தார். இந்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன், மாவோ தீவிரவாதிகளால் பாஸ்டர் வனப்பகுதிக்குள் வைக்கப்பட்டுள்ளார். அவரை மீட்டு வர மீட்புகுழுவினராக சென்ற பேராசிரியர் ஹர்கோபால், ஓய்வுபெற்ற அதிகாரி சர்மா ஆகியோர் தற்போது திரும்பிவந்துவிட்டனர். அவர்கள் அலெக்ஸ் பால் மேனனை சந்திக்கவில்லை.


இவரை மீட்க தான் தயாராக இருப்பதாக தானாக முன்வந்த நாசரேத் மர்காசியஸ் கல்லூரி முதல்வர் ஜோயலுக்கு மாநில அரசு அழைப்பு விடுத்தது. இதனையடுத்து அங்கு சென்று முதல்வரிடம் ஆலோசனை நடத்தினார்.


தற்போது சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் தங்கவைக்கப்பட்டுள்ள ஜோயல் நமது நிருபரிடம் கூறியதாவது: சென்னையில் இருந்து விமானத்தில் ராய்ப்பூர் வந்தேன். இங்கு முதல்வர் ராமன்சிங்கை நேரில் சந்தித்தேன். கலெக்டர் மீட்பு நடவடிக்கை குழுவினர் என்னிடம் பேசினார்கள். ராய்ப்பூரில் இருந்து 300 கி.மீ.,தொலைவில் பாஸ்டர் வனப்பகுதிக்கு ஹெலிகாப்டரில் அழைத்துசெல்கிறார்கள். அங்கு காத்திருக்கும் மாவோயிஸ்ட் அமைப்பினர் மோட்டார் சைக்கிளில் சுமார் 100 கி.மீ.,தூரம் அழைத்துசெல்வார்களாம். அதன்பின்னர் நடந்துசெல்லவேண்டும். எப்படியும் கலெக்டரை மீட்டுவருவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த முயற்சியில் விமான டிக்கெட் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் நான் சொந்தமாகவே மேற்கொள்கிறேன். நான் இங்கு வந்ததும் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்னிடம் நேரில் பேசினார்கள். என்னைப்பற்றி விபரங்களை தெரிவித்தேன். அதனை அங்கு கூறியிருப்பார்கள் என நம்புகிறேன். நான் கலெக்டரை மீட்கபோகும் விஷயத்தை அவரது தந்தை வரதாசிடமும் போனில் தெரிவித்தேன். அவரும் சந்தோஷமடைந்தார். மாவோயிஸ்ட்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதால் ஆங்கிலம், மற்றும் தெலுங்கில் பேசலாம். என்னை பலரும் கண்காணிப்பது நன்றாக தெரிகிறது. என் உயிரை பணயம் வைத்தாவது கலெக்டரை நிச்சயம் மீட்பேன் என்றார் நம்பிக்கையோடு.

மாவோ.,க்கள் நிபந்தனை: இதற்கிடையில் அவரரை விடுவிக்க வேண்டுமானால் 75 கைதிகளை விடுவிக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர் . இதனையடுத்து இன்று முதல்வர் ராமன்சிங் உயர் அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
செல்வா - vellore  ( Posted via: Dinamalar Android App )
30-ஏப்-201217:05:34 IST Report Abuse
செல்வா நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை.நல்லது செய்ய நினைப்பவர்களை வாழ்த்துங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Raju Rangaraj - Erode,இந்தியா
30-ஏப்-201215:47:07 IST Report Abuse
Raju Rangaraj மாவோயிஸ்ட் அனுமதியோடு அவர்களை சந்திக்க போவது நல்லதே. நாட்டிலே சுட்டால் விசாரணை கமிசனாவது கேட்கலாம். காட்டிலே சுட்டார்கலானால் அதுவும் கிடையாது. எண்ணி துணிக கருமம்
Rate this:
Share this comment
Cancel
Tamilar Neethi - Chennai,இந்தியா
30-ஏப்-201215:19:34 IST Report Abuse
Tamilar Neethi இத்தனை பெரிய ராணுவம், அரசு அதிகாரம், விண்வெளி கலம், எல்லாம் இருந்த பிறகுதான் இந்த மாவட்ட ஆட்சியர் மாட்டிகொண்டு இப்படி இந்தியாவின் மானத்தை வாங்கியுள்ளார். இதில் மொழி தெரியாத இவர் போய் என்ன ஊமை பாசை பேச போகிறார். அதான் மீட்பு பணிக்கு நடவடிக்கை நடந்து கொண்டு இருக்கு. இங்கு இருக்கும் அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் நல்லாட்சி புரிவதற்கு அலெக்ஸ் போல நல்ல அதிகாரியாய் இருக்க சொல்லி கொடுங்கள். பிறக்கும் போதிலிருந்து இறக்கும் வரை (கல்லறை) அதிகாரிகள் ஆதிக்கம் அவர்களின் லஞ்சம் படிந்துள்ள கைகள், இதுதான் இப்படி நக்சல்கள் ஊருவாக இப்படி அலெக்ஸ் கள் கடத்த பட காரணம். நீங்கள் ஒரு அரசு அதிகாரி வீட்டு அருகில் குடியிருந்து அவர்களின் தின வேலையை கவனித்தால் அரசு இயந்திரம் முழுவதும் இவர்களுக்கு பயன் படுவது ராஜீவ் சொன்னது போல ஒரு ரூபா பொது மக்களுக்கு ஓதிக்கினால் 10 நயாபைசா தான் அவர்கள் வசம் செல்கிறது எப்படி என்பது தெரியும். எடுத்தால் விடுமுறை, அரசு இயந்திரம் இவர்கள் குடும்ப வசம் இப்படி இருந்தால் இப்படிப்பட்ட நல்ல ஆட்சியாளர்கள் நக்சல் வசம்தான். இந்த ஆட்சியாளர் இப்படி நக்சல் வசம் இருக்க நக்கசல் ஊருவாக காரணம் ..நம் வரிபணத்தில் குஜால் போடும் அரசியல் வாதிகள் அரசு அதிகாரிகள். இவர்களை இனம்கண்டு சட்டம் மூலம் தண்டித்தால் நக்சல் கலும் ஒழிவார்கள் , அரசு அதிகாரிகளும் இப்படி மாட்டி கொள்ள மாட்டார்கள். பேராசிரியரும் தான் வேலை பார்த்து கொண்டு இருப்பார் . இவர் வேகத்தை பார்த்தல் நம் ஊர் வீரப்பன் மாதிரி நச்சல்கள் இவரை அலெக்ஸ் கூட உட்கார வைத்து விடுவார்கள். அப்புறம் இவரை மீட்க வேறு ஒரு அதிகாரி செல்ல இப்படி மாறி மாறி உள்ளை வெளியே என்று ஆகிவிட போகிறது.
Rate this:
Share this comment
Arul Ruban - Tuticorin,இந்தியா
30-ஏப்-201216:24:32 IST Report Abuse
Arul Rubanஹலோ tamilar neethi, உனக்கு கல்லூரி முதல்வர் ஜோயல் பத்தி என்ன தெரியும் . அவர் செய்யும் நல்ல திட்டங்கள் பல. நீ உன் வேலைய பாரு ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X