நித்யானந்தாவுடன் செக்ஸ் தொடர்பில்லை : நடிகை ரஞ்சிதா வாக்குமூலம்

Added : ஜூலை 23, 2010 | கருத்துகள் (51)
Advertisement
நித்யானந்தாவுடன் செக்ஸ் தொடர்பில்லை : நடிகை ரஞ்சிதா வாக்குமூலம்

பெங்களூரூ : நித்யானந்தாவுடன் எனக்கு எந்தவிதமான செக்ஸ் தொடர்பும் இல்லை, என நடிகை ரஞ்சிதா தெரிவித்துள்ளார்.


கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பிடதி என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து யோகா கலையை போதித்து வருபவர் நித்யானந்தா. கடந்த மார்ச் மாதம் சில "டிவி' சேனல்களில், இவரும் நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருக்கும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. தமிழகத்தில் இவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின், இந்த வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டு விட்டது.தலைமறைவாக இருந்த நித்யானந்தா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, தனது ஆசிரமத்தில் பக்தர்கள் மத்தியில் சொற்பொழிவாற்றி வருகிறார்.


இதற்கிடையே, தலைமறைவாக இருந்த நடிகை ரஞ்சிதா, கர்நாடகா சி.ஐ.டி.,போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் குறிப்பிடுகையில்,"நித்யானந்தாவின் அறைக்கு ஓரிரு முறை சென்றுள்ளேன். அவருக்கும் எனக்கும் எந்த விதமான செக்ஸ் தொடர்பும் கிடையாது. "டிவி'யில் காட்டப் பட்டுள்ள காட்சிகள் கம்ப்யூட்டர் மூலம் சித்தரிக்கப்பட்டவை. "டிவி'யில் காட்டப்பட்ட பெண் நான் அல்ல. நித்யானந்தா எனக்கு எந்த செக்ஸ் தொல்லையும் கொடுக்கவில்லை' என்றார்.ரஞ்சிதாவின் வாக்குமூலத்தை சி.ஐ.டி., போலீசார் கர்நாடகா ஐகோர்ட்டில் நேற்று பதிவு செய்தனர். அமெரிக்க ஆசிரமத்தில் உள்ள நித்யானந்தரின் சீடர்கள் விமலானந்தாவையும், நித்ய கோபிகாவையும் கைது செய்து பெங்களூரு அழைத்து வர, அவர்கள் மத்திய அரசின் அனுமதியை கோரியுள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தகுமார் - Guntur,இந்தியா
24-ஜூலை-201022:32:50 IST Report Abuse
நந்தகுமார் நான் அவள் இல்லை (Part-4)
Rate this:
Share this comment
Cancel
24-ஜூலை-201022:24:35 IST Report Abuse
சமுதாய அக்கறை கொண்டவன் மதத்தையும் கடவுள் நம்பிக்கையும் இழிவு படுத்தும் இது போன்ற சாமியார்களை எல்லாம் சாகும் வரை தொக்கிலிட வேண்டும் ......இவர்களுக்கு எல்லாம் ஜாமீன் தர கூடாது
Rate this:
Share this comment
Cancel
raja - perambalur,இந்தியா
24-ஜூலை-201021:39:01 IST Report Abuse
raja ranjitha mam you meen comdey? world in the your stills .that comday
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X