பீகார் சட்டசபை நேற்றும் ஒத்திவைப்பு

Added : ஜூலை 24, 2010
Share
Advertisement

பாட்னா: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், பீகார் சட்டசபை  நேற்றும்  ஒத்தி வைக்கப்பட்டது. பீகாரில் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதில் பெருமளவு நிதி முறைகேடு நடந்துள்ளதாக கூறி, கடந்த 21ம் தேதி, சட்டசபையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். முதல்வர் நிதிஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


அப்போது திடீரென ஆவேசமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கைகளை தூக்கி வீசி, ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 67 எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று சபை கூடியதும், காங்கிரஸ் எம்.எல்.ஏ., சவுத்ரி மெகபூப் அலி இந்த பிரச்னையை எழுப்பினார். "உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும். அவர்களை சபை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்'என, வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த சபாநாயகர் உதய் நாராயண் சவுத்ரி,"என் கடமையைத் தான் செய்தேன். சபையின் பெருமையை காக்க வேண்டியது என் பொறுப்பு' என்றார். இதை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். சபையின் மையப் பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து, மதியம் வரை சபை ஒத்தி வைக்கப்பட்டது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X