சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலித் கிறிஸ்தவர்கள் டில்லியில் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 24, 2010
Share
Advertisement
சென்னை : தலித்களாக இருந்து கிறிஸ்தவர்களாகவோ அல்லது முஸ்லிம்களாகவே மதம் மாறிய தலித்துகளுக்கு உரிய சலுகைகளையும் வழங்க கோரி, நேற்று டில்லியில் பேரணி மற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை வகித்தார்.பீகாரைச் சேர்ந்த எம்.பி., அலி அன்வர் அன்சாரி, முனைவர் கோபால் சிங் தலைமையிலான

சென்னை : தலித்களாக இருந்து கிறிஸ்தவர்களாகவோ அல்லது முஸ்லிம்களாகவே மதம் மாறிய தலித்துகளுக்கு உரிய சலுகைகளையும் வழங்க கோரி, நேற்று டில்லியில் பேரணி மற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை வகித்தார்.
பீகாரைச் சேர்ந்த எம்.பி., அலி அன்வர் அன்சாரி, முனைவர் கோபால் சிங் தலைமையிலான சிறுபான்மையினர் கமிஷன் உறுப்பினர் ஜவகர் ராஜ், பிராங்க்ளின் தாமஸ், கிறிஸ்தவ வர்த்தகக் கழகத்தின் துணைத் தலைவர்கள் தயா தேவதாஸ் ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி முடிவில், தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையிலான குழுவினர், ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர்.அங்கு ஜனாதிபதிபிரதிபா பாட்டீலை சந்தித்து, தலித் கிறிஸ்தவர்களையும், தலித் முஸ்லிம்களையும், தாழ்ப்பட்டோர் பட்டியலில் சேர்க்க, ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.மேலும், மத்திய அமைச்சர்கள் வாசன், வீரப்ப மொய்லி, முகுல் வாஸ்னிக், பெர்ணான்டஸ் ஆகியோரையும் சந்தித்து மனு அளித்தனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X