மதுரை: மதுரை ஆதீன மடத்தில் ஆதீனத்திற்கு பணிவிடை செய்த பெண் நித்தியானந்தா சீடர்களால் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை ஆதீனமாக நித்தியானந்தா முடி சூட்டப்பட்ட பின்னர் இன்று அவர் மீண்டும் மதுரை வரவுள்ளார். முன்னதாக மதுரை ஆதீன மடத்தில் பணிவிடை செய்து கொண்டிருந்த வைஷ்ணவி என்ற பெண் சீடர் ஆதீன மடத்தினை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நித்தியானந்தா சீடர்கள் அப்பெண்ணை மிரட்டி தாக்கினார். இனி இங்கு உனக்கு வேலை இல்லை வெளியேறுமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மதுரை ஆதீன மடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.