சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் காணாமல் போன குழந்தை ஏர்வாடியில் கொலை

Added : ஜூலை 24, 2010 | கருத்துகள் (3)
Share
Advertisement
மதுரை : மதுரை தர்ஹாவில் காணாமல் போன குழந்தையின் உடல் ஏர்வாடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை அருகே உள்ள எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ஷிரின் பாத்திமா. இவர் வேண்டுதலுக்காக மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தர்ஹாவில் தனது 1 1/4 வயது குழந்தை காதர் யூசுப்புடன் இரவு தங்கி உள்ளார். காலையில் எழுந்ததும் அருகில் குழந்தை இல்லாததைக் கண்டு

மதுரை : மதுரை தர்ஹாவில் காணாமல் போன குழந்தையின் உடல் ஏர்வாடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை அருகே உள்ள எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ஷிரின் பாத்திமா. இவர் வேண்டுதலுக்காக மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தர்ஹாவில் தனது 1 1/4 வயது குழந்தை காதர் யூசுப்புடன் இரவு தங்கி உள்ளார். காலையில் எழுந்ததும் அருகில் குழந்தை இல்லாததைக் கண்டு பாத்திமா அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கோரிப்பாளையம் போலீசில் ஜூலை 2ம் தேதியன்று புகார் அளிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வந்த கோரிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன், காயல்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் கபுர்(30) என்பவரை கைது செய்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தையை கொலை செய்து தலையை தூத்துக்குடியிலும், உடலை ஏர்வாடி தர்ஹா அருகிலும் புதைத்திருப்பதாக தெரிவித்தார். அப்துல் கபுருக்கு மனநிலை சரியில்லாததால், தலைக்குழந்தையை நரபலி கொடுத்தால் மனநோய் சரியாகும் என்பதால் குழந்தையை கடத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. குழந்தையில் உடலை மீட்க குற்றவாளி அப்துல் கபுருடன் தாசில்தார், உயர் அதிகாரிகள், போலீசார் ஆகியோர் தூத்துக்குடி விரைந்துள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெகநாதன் - chennai,இந்தியா
25-ஜூலை-201009:30:21 IST Report Abuse
ஜெகநாதன் இந்தியாவில் இதெல்லாம் சர்வ சாதாரணம் .மனிதாபிமானம் என்பது போய் ரொம்ப காலமாகி விட்டது .அப்துல் கபூருக்கு என்ன தூக்கு தண்டனையா?இல்லையே .அவன் வெளியில் வந்து விடுவான் .இன்னொரு சிசுவை கூட நரபலி கொடுத்தாலும் ஆச்சரியபடுவதற்கு ஒன்றும் இல்லை.இந்திய சட்டத்தில் சலுகையும் உண்டு .பழி வாங்குதலும் உண்டு .அரசியல் செல்வாக்கு இருந்தால் போதும்.அப்துல் கபூருக்கு எந்த செல்வாக்கோ !
Rate this:
Cancel
ஜானகி - singapore,இந்தியா
24-ஜூலை-201016:35:27 IST Report Abuse
ஜானகி யெவன் எல்லாம் மனிதனா
Rate this:
Cancel
banu - chennai,இந்தியா
24-ஜூலை-201016:18:11 IST Report Abuse
banu என்ன ஒரு மூடத்தனமான நம்பிக்கை...கடவுள் என்ன சொல்லி இருகிறார் என்று தெரியாமல்...எதோ ஒரு மூன்றாம் நபரின் தூண்டுதலால் நடந்த ஒரு துர் சம்பவம் இது.....யாரும் அவனை கொலை செய்..நீ நல்லா இருப்பாய் என்று எந்த மதமும் வலியுறுத்தவில்லை....பச்சை குழந்தைகளை கொள்வது இப்போலூது வாடிக்கையாகி விட்டது....பெற்றவர்கள் படும் பாடு தான் பாவம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X