சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கன்டெய்னர் யார்டில் லஞ்சம் பெற்ற பெண் அதிகாரி கைது

Added : மே 13, 2012 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை: தனியார் கன்டெய்னர் யார்டில் இருந்து, கன்டெய்னர்களை வெளியே அனுமதிக்க லஞ்சம் பெற்ற சுங்கத்துறை பெண் அதிகாரியை சி.பி.ஐ., கைது செய்தது. அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து, பல லட்சம் மதிப்பு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பெண் துறைமுக அதிகாரி... : சென்னை துறைமுகத்தில், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதியாகும் பொருட்கள் கன்டெய்னர் மூலம் வரும் போது, அவை அரசு கன்டெய்னர் யார்டில் நிறுத்தி வைக்கப்படும். அங்கு நிரம்பிவிட்டால், தனியார் கன்டெய்னர் யார்டுகளில் வைக்கப்படும். இது வழக்கமான ஒன்று. இவ்வாறு யார்டுக்கு வரும் கன்டெய்னர்களில் உள்ள பொருட்களுக்கு சுங்கத்துறையில் வரி விதிக்கப்படும். எண்ணூர் துறைமுகத்தில், சுங்கத்துறை அதிகாரியாக இருப்பவர் தேன்மொழி, 42.

லஞ்சப்புகார்: இவர், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்களுக்கு வரிவிதிப்பதில், பொருட்களின் விலை மற்றும் அளவை குறைத்துக் காட்டி, அதன் மூலம் வருமானம் பெறுவதாகவும், கன்டெய்னர்களை சோதனை முடித்து வெளியில் அனுப்ப லஞ்சம் பெறுவதாகவும், சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இத்தகவல் அடிப்படையில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு, தேன்மொழியை சந்தித்த மூவர், அவரிடம் பணத்தை கொடுத்ததை சி.பி.ஐ., அதிகாரிகள் கண்காணித்து, உடனடியாக தேன்மொழியை பிடித்து சோதனையிட்டனர்.

பறிமுதல்: அவரிடம், 27 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, பணத்தை கொடுத்த மூவரையும் பிடித்து விசாரித்த போது, அம்பேத், ராஜேந்திரன் மற்றும் சேகர் என்பதும், மூவரும் புரோக்கர்களாக செயல்பட்டு, "சேன்கோ' என்ற தனியார் கன்டெய்னர் யார்டில் இருந்து, கன்டெய்னரை வெளியே அனுப்புவதற்காக லஞ்சம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, தேன்மொழியின் அலுவலகத்தை, சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையில் அந்த அலுவலகத்தில் இருந்து, கணக்கில் வராத பணம், லேப்-டாப், மொபைல் போன்கள், வெளிநாட்டு கேமரா உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வாசனை திரவியங்கள் அடங்கிய பெட்டிகள் கண்டறியப்பட்டன.

பணம், ஆவணங்கள் : இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, புளியந்தோப்பு அருகில் படாளத்தில் உள்ள தேன்மொழியின் வீட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவு சோதனையிட்டனர். சோதனையில், வீட்டில், 55 ஆயிரம் ரூபாய் பணம், வங்கிக் கணக்கில் நான்கு லட்சம் ரூபாய் வரவு வைத்ததற்கான ஆவணங்கள், ஒரு அறையில், பல லட்சம் மதிப்பு வெளிநாட்டு பொருட்கள், அழகு சாதன பொருட்கள் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. இவை அனைத்தையும் சி.பி.ஐ,, அதிகாரிகள் கைப்பற்றினர். தொடர்ந்து, தேன்மொழியையும் அவருக்கு உடந்தையாக இருந்த, மூன்று புரோக்கர்கள் மீதும் வழக்குப் பதிந்த சி.பி.ஐ., அதிகாரிகள், அவர்களை அடையாறில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ரவீந்திரன் வீட்டிற்கு நேற்று, காலை கொண்டு வந்தனர். தொடர்ந்து, அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
- Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-மே-201210:44:18 IST Report Abuse
 இந்தப்பெண் மட்டுமல்ல. சுங்கத்துறையில் பணி புரியும் எல்லா அதிகாரிகளும் சிப்பாய் களும் பயங்கர கொள்ளை அடித்து வருகின்றனனர். சிபிஐ இவர்கள் எல்லார் அலுவலகங்களையும் , வீடுகளையும், சொத்துக்களையும் ரெய்டு செய்யவேண்டும் கணக்குகளை உண்ணிப்பாக பார்க்கவேண்டும். பல கோடிகள் வெளியே வரும்.
Rate this:
Share this comment
Cancel
Arjun - Atlanta ,யூ.எஸ்.ஏ
13-மே-201202:32:10 IST Report Abuse
Arjun ..கணக்கில் வராத பணம், லேப்-டாப், மொபைல் போன்கள், வெளிநாட்டு கேமரா உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வாசனை திரவியங்கள் அடங்கிய பெட்டிகள் கண்டறியப்பட்டன.-இன்னுமொரு சுமதியாஅல்லது ராஜனா-போகிறபோக்கைப்பார்த்தால் எல்லோரும் வெளியே வந்து விடுவார்கள் போலதெரிகிறது.இதுவும் அந்த ரகமோ.-இந்த அம்மா கேமராவை பார்த்ததும் &39விசுக்கென்று&39 முகத்தை மூடிக்கொண்டார்.பரிதாபமாக இருந்தது.பதவியை துஷ் பிரயோகம் செய்வோர் கதி..arjun
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X