புதுடில்லி: ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, பாபு ஜெகஜீவன்ராம் என புகழ் பெற்ற ஆன்றோர்களும், அறிவு நிறைந்த சான்றோர்களையும், புரட்சிமிக்க பல்வேறு சட்டங்களை கண்டதுமான இந்தியா பார்லிமென்ட்டுக்கு இன்று வயது 60. இது துவக்கப்பட்டதன், 60வது ஆண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி, பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்துக்கு, இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
மக்களின் எண்ணங்களை கொள்கை திட்டங்களாக மாற்ற வேண்டும் என ஜனாதிபதி கூட்டு கட்டத்தொடரில் கூறினார்.
இந்த கூட்ட துவக்கவுரையில் பிரதமர் மன்மோகன்சிங்; மாண்பு மிக்க பார்லி.,யின் பெருமைகள் மறக்க முடியாதது என்றும், இதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் கூறினார்.
இந்த கூட்டம் எப்போதும் போல் அமளி , துமளி அல்லாமல் லோக்சபாவில், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சிறப்பு விவாதத்தை துவக்கி வைத்து பேசுகிறார். ராஜ்யசபாவில், பிரதமர் மன்மோகன் சிங், சிறப்பு விவாதத்தை துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் அருண்ஜெட்லி, இதன் பின், இரண்டு சபைகளிலும், அனைத்து அரசியல் கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் உரை நிகழ்த்துகின்றனர். நாட்டின் முதல் லோக்சபா அமைக்கப்பட்டபோது, உறுப்பினர்களாக இருந்த ரெய்சாங் கெய்சிங், ரேஷாம் லால் ஜாங்டே ஆகியோர், பார்லிமென்டில் கவுரவிக்கப்படவுள்ளனர். பிரணாப் தனது உரையில் விவாதங்கள், வரவேற்கப்பட வேண்டியது என்றனர்.
துவக்கவுரையில் பிரதமர் ; ராஜ்யசபாவில் துவக்கவுரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங்; இந்த அவை பெரும் மதிப்பும், மரியாதைக்கும் உரியதாக விளங்கி வருகிறது. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பெருந்தலைவர்களின் பங்கு பெருமை அளிப்பதாக உள்ளது. இங்கு பயனுள்ள நல்ல பல விவாதங்கள் நடந்துள்ளன. மக்களுக்கு அறிவியல். கல்வி, வேலைவாய்ப்பு என நன்மை தரும் வகையில் இந்த அவை பணியாற்றியிருக்கிறது. இது போன்ற நல்ல பணிகள் தொடர்ந்து நடந்திடவும், நாட்டின் வளர்ச்சிக்கும் பாடுபடுவோம் . இவ்வாறு பிரதமர் பேசினார். முன்னதாக அவைத்தலைவர் மீராகுமார் பார்லி.,யின் பெருமைகளை எடுத்துரைத்தார்.
சோனியா ஆவேசம்: இந்த உரையில் பேசிய சோனியா; பார்லியி.,ன் ஒருமைப்பாடும், சுதந்திரதன்மையும் தொடர்ந்து பேணிக்காத்திட வேண்டும். இதில் நாம் எந்தவொரு சமரசமும் செய்து கொள்ள கூடாது என்றார்.
ஜனாதிபதி உரை: மாலையில் பார்லிமென்ட் கூட்டுக்கூட்டத்தொடர் நடந்தது. இந்த கூட்டத்தொடரில் லோக்சபா சபாநாயகர் மீரா குமார், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினர்
பிரதமர் பேசியதாவது: நமது நாடு வருங்காலத்தில்
மிகப்பெரிய சாதனை படைக்கும். இதன் மூலம் மிகப்பெரிய உயரத்தை அடையும். நமது
ஜனநாயகம் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளது. நமது குடியரசை வலுப்படுத்தும்
வகையில் பார்லிமென்ட் உறுதுணையாக இருக்கிறது. பார்லிமென்டில் முக்கிய
விவகாரங்களில் தீவிர விவாதம் நடந்து வருவது குறைகிறது.நாம் முழுமையான ஜனநாயகத்தை பெறவில்லை. இருந்தபோதிலும், நாம் வேறுபட்ட மக்களின் நலன்கள் மற்றும் வேற்றுமைகளை ஒற்றுமைப்படுத்த பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஜனநாயகத்தை கொண்டுள்ளோம். நமது உயிரூட்டமுள்ள ஜனநாயகம் நமது நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறது என்றார். பார்லிமென்டில் ஏற்படும் இடையூறுகள் பற்றி குறிப்பிட்ட அவர், நமது ஜனநாயக பாதையில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுகிறோம். நூற்றாண்டுகள் அனுபவம் மூலம் வளர்ச்சி பெற்ற ஜனநாயகத்தை கிண்டல் செய்பவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும் என்றார்.
இதன் பின்னர் முதல் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட எம்.பி.,க்களுக்கு விருதும்,பதக்கமும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதன் பின்னர், சிறப்பு நாணயங்கள், பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர்கள் ஆற்றிய உரை, முக்கிய மசோதாக்கள் மீது நடந்த விவாதம் ஆகியவை புத்தகங்களாக ஜனாதிபதி வெளியிட்டார்.
இதன் பின்னர் ஜனாதிபதி பேசியதாவது: இந்தியா தொடர்ந்து ஜனநாயக பாதையில் செல்கிறது என பெருமிதம் தெரிவித்தார். மேலும் அவர், மக்களின் எதிர்பார்ப்புகள் கொள்கை திட்டங்களாக மாற்ற வேண்டும். நம்மிடம் பலவீனமான கொள்கைகள் இல்லை அரசாங்கம் பெமபாலும் கூட்டணி மற்றும் பல கட்சிகள் நிறைந்த ஆடசியாக உள்ளது.வெளிநாட்டு விவகாரங்கள் நமது ஜனநாயகத்தை பாதிக்கிறது. உயிர்த்துடிப்பான மற்றும் வலுவான ஜனநாயகம் தொடர செய்வது சவாலாக உள்ளது. எனவே நாம் மிகவும் கவனமுடனும், மன உறுதியுடனும் நமது ஜனநாயகத்தை கொண்டு செல்ல வேண்டும். வலுவான ஜனநாயகத்தை கொண்டு வருவது என்ற எண்ணத்திலிருந்து விலக கூடாது. தற்போது உலகில் உலகில் உள்ள ஜனநாயகங்கள் சிக்கலான நிலையில் உள்ளபோது நமது ஜனநாயகத்தை தடுமாறவிடக்கூடாது. நமது சமூகத்திலும் தேர்தல் நடைமுறைகளிலும் ஊழல் மறறும் கொடுஞ்செயல்களை நீக்க வேண்டும். விவாதங்கள் என்பது மிகவும் கடினமாக இருக்கும், பாதை மாறும். ஆனால் அதற்கு பார்லிமென்ட் நடைமுறைகளில் தீவிரமாக விவாதம் நடத்தி முடிவு காண வேண்டும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE