சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

Added : மே 14, 2012 | கருத்துகள் (2)
Share
Advertisement
தூக்கம் இழந்த இரவுகள்...? கு.அருண், புவனகிரியிலிருந்து எழுதுகிறார்: ஒவ்வொருவர் இறப்பிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. போர்க்களத்தில், எதிரிநாட்டின் வீரனின் குண்டுகளை, நம் நாட்டின் பாதுகாப்பிற்காக, தனது நெஞ்சில் தாங்கி, உயிரிழப்பவர்களை, தியாகிகளாகப் போற்றி மகிழ்கின்றோம். அதே வகையில், தான் நம் நாட்டில் பயங்கரவாதிகளாலும், மாவோயிஸ்டுகளாலும், பல காவல்துறை அதிகாரிகளும், ராணுவ
இது உங்கள் இடம்

தூக்கம் இழந்த இரவுகள்...? கு.அருண், புவனகிரியிலிருந்து எழுதுகிறார்: ஒவ்வொருவர் இறப்பிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. போர்க்களத்தில், எதிரிநாட்டின் வீரனின் குண்டுகளை, நம் நாட்டின் பாதுகாப்பிற்காக, தனது நெஞ்சில் தாங்கி, உயிரிழப்பவர்களை, தியாகிகளாகப் போற்றி மகிழ்கின்றோம். அதே வகையில், தான் நம் நாட்டில் பயங்கரவாதிகளாலும், மாவோயிஸ்டுகளாலும், பல காவல்துறை அதிகாரிகளும், ராணுவ வீரர்களும் கொலை செய்யப்படும் போது, அவர்களின் நியாயமும் போற்றிப் பாராட்டப்பட வேண்டும். அதே நேரத்தில், அவர்களின் குடும்பத்தினர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் தகுந்த வெகுமதி அளிப்பதுடன், அவர்களின் வாழ்க்கையை, அவர்கள் துயரம் இல்லாமல் கழித்திட, வேலை வாய்ப்பு அளித்து, அவர்களின் குடும்பங்களை, அரசே தத்தெடுத்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில், மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனின் இரண்டு பாதுகாவலர்கள், அம்ஜத்தும் , நிசாறும் மாவோயிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்டதை அனைவரும் அறிவர். நிச்சயம் அவர்களின் குடும்பம், இனி தூக்கம் இழந்த இரவுகளாகத் தான் தினமும் சந்திக்கும். பால்மேனனின் மனைவி கூட, அவர்களின் குடும்பத்தைப் பற்றி வருத்தத்துடன் பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில், மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனும், பாதுகாவலர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், இரவில் தன் தூக்கத்தை இழந்து தவிப்பதாகப் பேட்டி அளித்துள்ளார். இது, அவரின் இளகிய மனதைக் காட்டுகிறது. இன்று, நாடு முழுவதும் பல காவலர்கள், நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் இன்னுயிரை இழப்பதும், பல அதிகாரியின் முதல் பொதுப் பணிகள் வரை, இந்த மாவோயிஸ்டுகள் போன்றோரால், படுகொலை செய்யப்படுவதும் தொடர் கதையாகிவிட்டது. இதை எத்தனை பேர் சிந்திக்கின்றனர்?


சன்னியாசிகளுக்கு நடனம் தேவையா? ரா.செல்லன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: சமீப காலமாக, இந்து சன்னியாசி மடங்களில், பெண்களின் ஆதிக்கத்தால், நம் சமயநெறிகளுக்கு சவால் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நித்யானந்தாவின் மடத்தில், பெண்களின் பூஜை தவிர, நடனங்களும் அரங்கேற்றப்படுவதாக வரும் செய்திகள், நல்லதாய் இல்லை. நித்யானந்தாவை, மதுரை ஞானசம்பந்தர் தோற்றுவித்த மடத்தின் அடுத்த குருவாக, மதுரை ஆதீனம் நியமித்துள்ளார். இது, அவர் தனிப்பட்ட கருத்து. ஆனால், மதுரை ஞானசம்பந்தர் மடம் ஆதீனமோ, "நானும் பெண்களுடன் சேர்ந்து ஆடினேன்; மகிழ்ச்சியாக இருந்தது' எனக் கூறியுள்ளது, வேதனை தரும் செய்தியாக உள்ளது. நித்யானந்தா முதலில் விவேகானந்தரின் கருத்தை பின்பற்றியவராக இருந்துள்ளார். ஆனால், விவேகானந்தர் மடத்தில், பெண்களின் பங்கு பற்றி குறிப்பிடும்போது, "சன்னியாசி எவரும், பெண்டிருக்கான மடத்தில் சென்று வசிக்கக் கூடாது. இந்த விதிக்கு செவிசாய்க்காதவர் மடத்திலிருந்து விலக்கப்படுவர்' என்று கூறியுள்ளார்; அது பின்பற்றப்படுகிறது. சன்னியாசிகள் நடனம் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தும்.


எதற்கு இந்த பிரசாரம்? ஆர்.சம்பத்குமார், ஆழ்வார்பேட்டை, சென்னையிலிருந்து எழுதுகிறார்: "பல்லாண்டுகளாக உலகத் தமிழினத்தின் தலைவராக இருப்பவர் கருணாநிதி' என, ஒரு பிரபல ஆங்கில வார இதழ் கூறியுள்ளது. அடக் கொடுமையே... உலகெங்கும் உள்ள தமிழர்களை விடுங்கள்; தமிழகத்திலேயே அவரை தலைவராக அங்கீகரிக்காதவர்களும், ஏற்றுக்கொள்ளாதவர்களும் லட்சக்கணக்கில் உள்ளனர் என்பது, அந்த வாரப் பத்திரிகைக்கு தெரியாது போலிருக்கிறது. எம்.ஜி.ஆரை அரியணையில் அமர்த்தி அழகு பார்த்த தமிழர்கள், கருணாநிதியை முழுவதுமாக ஓரங்கட்டி, வனவாசம் அனுபவிக்க வைத்தனர். "13 ஆண்டு தண்டனை போதாதா... என்னை மீண்டும் முதல்வராக்குங்கள்' என்று, மக்களிடம் கெஞ்சியவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர்., குணமடைந்து, அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன், "நான் விலகிக் கொள்கிறேன்; அவரே முதல்வராக இருக்கட்டும்' என்று கூறியது வரலாறு. "தமிழினத் தலைவர்' என்பது, கருணாநிதியின் அடிவருடிகளும், அல்லக்கைகளும் அவருக்கு மகிழ்ச்சியூட்டுவதற்காக சூட்டிய பட்டம் என்பதை, நடுநிலையாளர் ஒப்புக்கொள்வர். எதற்கு இப்போது இந்த பிரசாரம்?

மக்களுக்கு என்ன பயன்? பா.பாண்டிச்செல்வம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சமீப காலங்களில், நடக்கும் சட்டசபை கூட்டத்தொடர்கள், மனதுக்கு மிகவும் வேதனையை தருகின்றன. சங்கரன் கோவில் இடைத்தேர்தலில், தே.மு.தி.க., தோல்வியடைந்தது என்பது, நாம் எல்லாரும் அறிந்ததே. ஜனநாயக நாட்டில், வெற்றி, தோல்வி என்பது, எல்லா கட்சியினருக்கும் பொருந்தும். முல்லைப்பெரியாறு பிரச்னை, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை, மின்தடை, விலைவாசி உயர்வு என எவ்வளவோ மக்கள் பிரச்னைகள் உள்ளன. சட்டசபை கூட்டத்தொடரில், தொடர்ந்து அமைச்சர்களும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும், தே.மு.தி.க., தேர்தல் தோல்வியையே மிக முக்கியப் பிரச்னையாகக் கருதி, அவர்களை நக்கலாக பேசி வருகின்றனர். இதனால், மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது? கடந்த அரசு சரியாக செயல்படவில்லை என்ற காரணத்தால் தான், மக்கள் அவர்களை புறக்கணித்து, இவர்களை ஆட்சியில் அமர வைத்தனர். இப்போது, எதற்கெடுத்தாலும் அவர்களையே குறை கூறுவது ஏன்? இதனால், நேரம் விரயம் ஆவதுதான் மிச்சம். மதிப்பும், உன்னதமும் கொண்டது சட்டசபை கூட்டம். மக்களின் நல்வாழ்வு பற்றிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு, ஆராயப்பட்டு தீர்வுகள் எட்டப்பட்டு செயல்படுத்தப்படும் இடம். புனிதமான இந்த சட்டசபை கூட்டத்தொடரில், தேவையற்ற விஷயங்கள் தவிர்க்கப்பட்டு, மக்கள் பயன்பாடுகள் பற்றிய, ஆரோக்கியமான விஷயங்கள் தொடர்ந்திட, நம் தமிழக முதல்வர் ஆவன செய்து செயல்படுத்த வேண்டும்.

இலவசம் சரிப்படாது? க்யூ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: பஸ் கட்டண உயர்வு விமர்சனத்துக்குள்ளான காலகட்டத்தில், ஆளும் அ.தி.மு.க., சீனியர் சிட்டிசனுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என கூறியதற்கு, மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. இலவச பஸ் பாஸ் என்பது, ஆரோக்கிய அணுகுமுறை அல்ல என்பதால், கட்டண சலுகைகள் சீனியர் சிட்டிசனுக்கு தரலாம். அவர்களுக்கு, அடையாள அட்டை வழங்கி அமல்படுத்துவது குறித்து யோசனை செய்யலாம். பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில், உள்ளூர் பஸ்சில் மட்டும் அல்லாது, வெளியூர் நெடுந்தூர பஸ்சில் பயணம் செய்யும் சீனியர் சிட்டிசனுக்கு, கட்டண சலுகைகள் அளிக்கப்படுகின்றன. தமிழகத்திலும், பஸ் கட்டண சலுகைகள் அளித்து உதவலாம். இலவசம் சரிப்படாது!


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
senthilkumarrr - coimbatore,இந்தியா
15-மே-201216:29:32 IST Report Abuse
senthilkumarrr well
Rate this:
Cancel
பிரகாசம்.ல் - VANIYAMBADI,இந்தியா
15-மே-201210:36:47 IST Report Abuse
பிரகாசம்.ல் என் தம்பி இந்த ஆண்டு +2 அரசு உதவி பெரும் பள்ளியில் முடிதுல்லான் .அவனுக்கு லாப் லாப் கிடைக்குமா கிடைக்காதா .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X