கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்

Updated : மே 20, 2012 | Added : மே 18, 2012 | கருத்துகள் (61) | |
Advertisement
சென்னை:""எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்றவில்லை எனில், அதிகபட்சமாக இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்,'' என, மகாராஷ்டிர மருத்துவக் கல்வி அமைச்சர், விஜய்குமார் காவித் கூறினார். சென்னை அரசு மருத்துவக் கல்லூரியையும், மருத்துவமனையையும் பார்வையிடுவதற்காக, மகாராஷ்டிர மாநிலத்தின்

சென்னை:""எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்றவில்லை எனில், அதிகபட்சமாக இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்,'' என, மகாராஷ்டிர மருத்துவக் கல்வி அமைச்சர், விஜய்குமார் காவித் கூறினார்.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரியையும், மருத்துவமனையையும் பார்வையிடுவதற்காக, மகாராஷ்டிர மாநிலத்தின் மருத்துவக் கல்வி அமைச்சர் விஜய்குமார் காவித்க நேற்று சென்னை வந்தார்.அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் கனகசபையுடன் கலந்துரையாடினார்.


பின், அமைச்சர் பேசியதாவது:எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனையிலும் பணிபுரிவதற்கு, முற்றிலும் தடை விதித்துள்ளோம். வெளியில் பணிபுரியச் சென்றால், அரசு மருத்துவமனைகளில் ஈடுபாட்டுடன் பணிபுரிய மாட்டார்கள்.அவ்வாறு வெளியில் செல்வதைத் தவிர்ப்பதற்காக, ஆறாவது ஊதியக் குழுவின் ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.


மகாராஷ்டிராவில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், குறைந்தது ஓராண்டுக்கு, கிராமப் புறங்களில் பணியாற்ற வேண்டும். அவ்வாறு, பணிபுரிய மறுப்பவர்கள், அரசிற்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும்.மேலும், சென்னை அரசு பொது மருத்துவமனை, மிகவும் பெரியதாக இருக்கிறது. இங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, மிகவும் அதிகமாக இருக்கிறது. எங்கள் மருத்துவமனையில், அதிகமாக, 1,500 படுக்கைகள் மட்டுமே இருக்கின்றன.


தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மருத்துவர்கள், எங்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய தாராளமாக வரலாம். ஏனென்றால், அங்கு ஓய்வின் வயது,62 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு, 14 அரசு மருத்துவமனைகள் உள்ளன. மேலும், ஆறு மருத்துவமனைகள் உருவாக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arp Peter - sivagangai ,இந்தியா
20-மே-201209:41:34 IST Report Abuse
Arp Peter கிராமத்தான் சேத்துல கை வச்சாதான், நகரத்தான் சோத்துல கை வைக்க முடியும், அவர்கள் நலம்தான் அவசியமானது. மருத்துவ தொழில் புனிதமானது. அதை காசுக்காகவும் சொகுசுக்காகவும் மட்டும் பயன் படுத்த கிராமத்தில் பணியாற்ற தயங்கும் மருத்துவர்களே உங்க பூர்விகம் எங்கே? என்று திரும்பி பாருங்கள். கக்கூசுக்கு தண்ணி இல்லேன்னு கருத்து....??? கிராமத்துல விளையும் உணவு பொருட்கள் அனைத்தும் தண்ணி இல்லாம வருதா? அவன் கக்கூசுக்கு தண்ணி இல்லாம வெறும் சொம்பயா துக்கிட்டு போரா?.நாகரிகம் என்ற பெயரில் பேப்பர் தூக்குறான் அது நல்லதா?. காசுகுடுத்து படிச்சா....???? இரண்டு கோடி இல்ல. கிராமத்தில் பணியாற்ற முடியாத நபரின் உரிமம், சான்றிதழ்களை முடக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரத்துல தனியா கிளினிக் வச்சு ஒருபுடி புடிக்கலாம்முல. உள்ளூர் வாத்தியார் தன்னுடைய ஊரை விட்டு டவுன்ல இருந்து பள்ளிகூடத்திற்கு பத்து மணிக்கு வர்றது மாதிரி ஏன்? லேட்டு ஆபீஸ் போயிட்டு வரமல....[ ரியல் எஸ்டேட் ஆபீஸ் ] நல்லா இருக்குயா..????
Rate this:
Cancel
Ganabathy Arasu - Vellore,இந்தியா
19-மே-201223:19:55 IST Report Abuse
Ganabathy Arasu நாட்டில் இருக்கும் அணைத்து தனியார் மருத்துவ கல்லூரிகளும் நிச்சயமாக ஏதாவது ஒரு அமைச்சருடையதாகவோ அல்லது அவருடைய பினாமியுடையதாகவோ தான் உள்ளது. இவர்கள் படிப்பை சேவையாக வழங்க தயாராக இல்லை. ஆனால் மருத்துவர்கள் சேவை செய்யவேண்டும் என்று விரும்புபவர்கள். மருத்துவர்கள் தங்களது பணியை சேவை உணர்வுடன் தான் செய்ய வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கும் இடமே இல்லை. ஆனால் மருத்துவர்கள் தங்களை நம்பியுள்ள குடும்பத்தாரை பட்டினி போட்டுதான் தங்கள் தொழிலை அவர்கள் சேவையாக செய்வதாக நமக்கு உணர்த்தவேண்டுமா ?
Rate this:
Cancel
desadasan - mumbai,இந்தியா
19-மே-201222:21:05 IST Report Abuse
desadasan லேஹியம் விற்கும் டாக்டர்களே கிராமத்தில் இருப்பது இல்லை..அரசாங்கங்கள் வேறு வழியில் வருவாயை அதிகரிக்கும் வழிகளை யோசிக்கலாம்...மக்கள் கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்போது இவர்களால் எப்படி இப்படி யோசிக்கத்தோனுகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X