தமிழ்நாடு

ஏழை இந்து குழந்தைகளுக்கு கல்வி உதவிதொகை வாங்கும்வரை ஓயமாட்டோம்: பொன்.ராதாகிருஷ்ணன்

Added : ஜூலை 25, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement
நாகர்கோவில் : தமிழகத்தில் காவி கொடி ஆட்சி கொண்டு வந்தே தீருவோம் என நாகர்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ. தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார். நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அலைகடலென திரண்ட பா.ஜ.வினர் மத்தியில் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பா.ஜ. நடத்தி வரும் ஜூலை போராட்டத்தின் 22வது போராட்டம் இது.

நாகர்கோவில் : தமிழகத்தில் காவி கொடி ஆட்சி கொண்டு வந்தே தீருவோம் என நாகர்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ. தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.

நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அலைகடலென திரண்ட பா.ஜ.வினர் மத்தியில் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பா.ஜ. நடத்தி வரும் ஜூலை போராட்டத்தின் 22வது போராட்டம் இது. இதுவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 21 போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் கலந்துகொண்டவர்கள் 86 ஆயிரம் பேர். ஆனால் குமரி மாவட்டத்தில் மட்டும் லட்சம் பேர் கலந்துள்ளனர்.

தமிழக முதல்வருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது எந்த மாணவர் சக்தியை பயன்படுத்தியதோ, அந்த மாணவர் சக்தி இப்போது பா.ஜ. பக்கம் உள்ளது. எனவே இந்த போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

இஸ்லாமியர்கள் கல்வியில் பின் தங்கி இருக்கிறார்கள் எனவே கல்வி உதவித்தொகை கொடுக்கிறோம் என மத்திய அரசு சொல்கிறது. நாங்கள் சொல்கிறோம் கட்டாயம் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுங்கள். கிறிஸ்தவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள் என கூறுகிறார்கள். அவர்கள் கல்வியில் பின் தங்கி இல்லை. என்றாலும் அங்கும் ஏழைகள் இருக்கிறார்கள் எனவே அவர்களுக்கும் கட்டாயம் கல்வி உதவித்தொகை கொடுங்கள். ஆனால் பெரும்பான்மை என கூறி ஒதுக்கப்பட்டிருக்கும் இந்துக்களுக்கும் கல்வி உதவித்தொகை கொடுக்க வேண்டும் என கேட்கிறோம்.

அமைச்சருக்கு பதிலடி: அதிகாரத்திற்கு வருவதற்கு ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களையும் பெறவேண்டுமானால் சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என்பதற்காக இந்துக்கள் வாயில் மண்ணை அள்ளி போடுகிறார்கள். திருச்சியில் இதுபோன்ற போராட்டம் நடத்தினோம். அப்போது அந்த வழியாக வந்த அமைச்சர் நேரு வேறு வழியாக சென்றுவிட்டார். அதைப்போல் மற்ற மாவட்டங்களிலும் அங்குள்ள அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பேசாமல் இருந்தனர். ஆனால் இங்குள்ள அமைச்சர் சுரேஷ்ராஜன் தமிழகத்தில் இல்லாத மதங்களின் பெயரை சொல்லி அவர்களுக்கெல்லாம் கல்வி உதவி தொகை கொடுப்பதாகவும், இந்துக்களுக்கும் கல்வி உதவித்தொகை கொடுப்பதாகவும் கூறியுள்ளார். ஒரு கட்சியின் மாநிலத்தலைவர் தெருதெருவாக சென்று பிரசாரம் செய்வது ஆரோக்கியமான அரசியல் அல்ல என கூறியுள்ளார்.

அவருக்கு நான் கூறுகிறேன். பிற மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள் அமைதியாக சென்றது போல் இங்குள்ள அமைச்சர் சுரேஷ்ராஜனும் அமைதியாக இருக்க வேண்டும். எங்கள் கொள்கையில் வெற்றி பெறுவதற்காக தெருதெருவாக மட்டுமல்ல ஒவ்வொரு பா.ஜ. தொண்டனின் வீடு வீடாகவும் செல்வேன். குமரி மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் செல்வேன். ஏழை இந்து குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வாங்கும் வரை ஓய மாட்டோம்.

முதன்முறையாக ஆட்சிக்கு வந்த தி.மு.க. இந்துக்களின் ஓட்டுக்களை வாங்கிதான் ஆட்சியை பிடித்தது. இப்போது ஓட்டு போட்ட இந்துக்களையே தி.மு.க. ஏமாற்றுகிறது. இனிமேலும் தி.மு.க.விற்கு ஓட்டு போட குமரி மாவட்டத்தில் மக்களும், இந்துக்களும் தயாராக இல்லை. தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என நினைக்கிறார்கள். நாங்கள் ஏமாளிகள் இல்லை என்பதை வரும் தேர்தலில் நிரூபிக்க போகிறோம்.

ஏழை இந்து குழந்தைகளை புறக்கணிக்க அனுமதிக்க மாட்டோம் என தமிழகத்தில் யுக புரட்சி வருகிறது. அதன் ஒரு அங்கமாக இங்கு அமர்ந்து இருப்பவர்கள் உள்ளனர். கர்நாடகாவில் எடியூரப்பா பா.ஜ. ஆட்சியை கொண்டு வந்ததுபோல் தமிழகத்திலும் காவி கொடி ஆட்சி கொண்டு வந்தே தீருவோம். எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு இந்துவும் விலை போக மாட்டோம் என சவால் விடுகிறோம். இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிவா - singapore,சிங்கப்பூர்
26-ஜூலை-201019:39:45 IST Report Abuse
சிவா Everything success.Plz continue the service Mr.P.R.K
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X