5வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றார் ஆனந்த்

Added : மே 30, 2012 | கருத்துகள் (68)
Share
Advertisement
5வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றார் ஆனந்த்

மாஸ்கோ: உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஐந்தாவது முறையாக கைப்பற்றி அசத்தினார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த். இன்று நடந்த பரபரப்பான "டை- பிரேக்கரில்' இஸ்ரேலின் ஜெல்பாண்டை வீழ்த்தி, மீண்டும் மகுடம் சூடினார்.


ரஷ்யாவின் மாஸ்கோவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், 42, இஸ்ரேலின் போரிஸ் ஜெல்பாண்டு, 43, மோதினர். மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியின், 7வது மற்றும் 8வது சுற்றில் மட்டும், இருவரும் தலா ஒரு வெற்றி பெற்றனர். மற்ற 10 சுற்றுகள் "டிரா' ஆனது. 12 சுற்று முடிவில் இரு வீரர்களும் தலா 6 புள்ளி பெற்றனர். இதையடுத்து வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்ய, போட்டி "டை பிரேக்கருக்கு' சென்றது. "ரேபிட்' முறையில் நான்கு போட்டிகள் நடந்தது. இருவருக்கும் தலா 25 நிமிடங்கள் தரப்பட்டன.


முதல் "டிரா': முதல் போட்டியில் கறுப்பு காய்களுடன் ஆனந்த் விளையாடினார். இப்போட்டி 32வது நகர்த்தலின் போது "டிரா' ஆனது.


ஆனந்த் முன்னிலை: பின் இரண்டாவது போட்டியில் வெள்ளை காய்களுடன் போட்டியை துவக்கிய ஆனந்த், அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து 77 வது நகர்த்தலின் போது, ஜெல்பாண்டு தனது தோல்வியை ஒப்புக்கொள்ள, ஆனந்த் 1.5-0.5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.


மீண்டும் சமன்: மூன்றாவது போட்டியில், ஜெல்பாண்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், குறிப்பிட்ட நேரத்துக்குள் போட்டி முடியாத நிலையில், 41வது நகர்த்தில் போட்டி மீண்டும் "டிரா' ஆனது. ஆனந்த் தொடர்ந்து முன்னிலையில் (2.0-1.0) இருந்தார்.


அசத்தல் வெற்றி: கடைசியாக துவங்கிய நான்காவது போட்டியை ஆனந்த் "டிரா' செய்தாலே போதும் என்ற நிலையில், வெள்ளை காய்களுடன் ஆனந்த் போட்டியை துவக்கினார். இப்போட்டியும் 56 வது நகர்த்தலுக்குப் பின், "டிரா' ஆக, 2.5 புள்ளிகள் பெற்ற ஆனந்த், மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். இவர் ரூ. 8.5 கோடி பரிசாக தட்டிச் சென்றார். இரண்டாவது இடம் பெற்ற ஜெல்பாண்ட் ரூ. 5.7 கோடி பரிசு பெற்றார். செஸ் அரங்கில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய ஆனந்த் ஐந்தாவது முறையாக (2000, 07, 08, 10, 12) பட்டம் வென்றது, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Padmanabhan RajuNaidu - Adelaide,ஆஸ்திரேலியா
01-ஜூன்-201216:45:54 IST Report Abuse
Padmanabhan RajuNaidu எல்லோரும் பாராட்டினார்கள். யானும் பாராட்டுகிறேன் - இந்தியன், தமிழன் என்பதற்கு. ஆனால் .... எட்டரை கோடி பரிசுப்பணம் இப்போது மட்டுமே . முன்பு எத்தனை கோடி ? மிக்க மகிழ்ச்சி . தானே புயல் , பூகம்பம் என எவ்வளவோ பொது நிவாரண நிதி, ஏழைகள் துயர் , ஏழை மாணவர் கல்வி என என்ன உதவி செய்துள்ளார் விஸ்வநாதன் ஆனந்த் ? எதற்கு பாரத ரத்னா விருது? நாடு முன்னேறுவதற்கு பாடு பட்டவர்களுக்கே பாரத ரத்னா விருது தர வேண்டும். நானும்- சச்சினுக்கும் விஸ்வநாதன் ஆனந்த் கும் இந்த விருது தர வேண்டும் என முன்பு நினைத்தேன். ஆனால் அவசியம் இல்லை என இப்போது நினைக்கிறேன். பத்மவிபூஷன் விருது வரை கொடுக்கப்பட்டுள்ளது போதுமே வேறு விதத்தில் விருதுகள் வழங்கலாம். பத்மனபான் , கோவை.
Rate this:
Cancel
Sriramadesikan Jagannathan - Chennai (Madras),இந்தியா
01-ஜூன்-201215:07:29 IST Report Abuse
Sriramadesikan Jagannathan வாழ்த்துக்கள் ஆனந்த். நான் உங்களை உலகின் மிகச் சிறந்த செஸ் ஆட்டக்காரர்களான அலெக்சாண்டர் அளிகினே, பாபி பிஷேர் மற்றும் கர்ரி கஸ்பரோவ் ஆகியவர்களுக்கு சமமாகக் கருதுவதுண்டு. அனால் தாங்கள் அவர்களை விட சிறந்த வீரர் என்பதை இப்போது உணர்கிறேன். செஸ் வரலாற்றில் தாங்களே மிகப் பலம் பொருந்தியவர்கள். கடந்த ஆண்டிலிருந்தே நான் பாரத ரத்னாவிற்கு தாங்களே மிகத் தகுதி வாய்ந்தவர் என்று கருதிக்கொண்டிருக்கின்றேன். தங்களுக்குப்பிறகு சச்சின் இவ்விருதைப் பெற்றால் அது சரிஆனதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
Rate this:
Cancel
ganapathyg - Bangalore,இந்தியா
01-ஜூன்-201210:35:02 IST Report Abuse
ganapathyg பாராட்டுக்கள் விச்வநாத் ... பணிவுக்கும் முளைத் திறனுக்கும் பாரத ரத்னா தரப்பட்டால் அது அந்த விருதுக்கே பெருமை சேர்க்குமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X