பொது செய்தி

தமிழ்நாடு

இஞ்சி பயிரிட்டதில் இரட்டிப்பு லாபம்: சாதித்த பட்டதாரி விவசாயி

Added : மே 30, 2012
Share
Advertisement

தாண்டிக்குடி:பூலத்தூர் மலைக் கிராமத்தில் பட்டதாரி விவசாயி ஒருவரின் புது முயற்சியால், ஊடு பயிராக இஞ்சி பயிரிடப்பட்டு, மலை வாழையில், நோய் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.பூலத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 38. எம்.ஏ., பட்டதாரி. தோட்டத்தில் காபி, வாழை, ஆரஞ்சு, அவக்கடா உள்ளிட்ட மலைப்பயிர்கள் பயிரிட்டுள்ளார்.
தாண்டிக்குடி மலைப்பகுதியில் பயிரிடப்படும் மருத்துவ குணமுள்ள இஞ்சி, கால நிலை மாற்றத்தால், ஒரு சிலரால் மட்டுமே பயிரிடப்படுகிறது. கோகுலகிருஷ்ணன், 10 ஏக்கரில், மலை வாழைக்கு இடையே இஞ்சி பயிரிட்டுள்ளார். இதனால் மலை வாழையில் முடிக்கொத்து, வாடல் நோய் தாக்குதல் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது, மற்ற விவசாயிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கோகுலகிருஷ்ணன் கூறியதாவது: வாழைக்கு இடையே இஞ்சி பயிரிட்டேன். நல்ல மகசூலும் கிடைத்தது. வாழையில் நோய் தாக்குதல் கட்டுப்படுத்தி, தரமான வாழைக் காய்கள் கிடைத்தது. மலை இஞ்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இது, புது முயற்சி மட்டுமல்லாது மலை வாழைக்கு புத்துயிர் அளித்துள்ளது, என்றார்.
தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் ஆனந்தன் கூறுகையில், ""மருத்துவ குணமுள்ள மலை இஞ்சிக்கு இடப்படும் தொழு உரத்தால், வாழை வளர்ச்சி பெற்று எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பறிக்கப்பட்ட இஞ்சிச் சாறு வாழையில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. முதல் ஆண்டு வாழையில், ஊடுபயிராக இஞ்சி பயிரிட்டால், நல்ல பலன் கிடைக்கும்,'' என்றார்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X