aravil lady murder case | ஆரோவில் பெண் கொலை வழக்கு 5 பேரிடம் போலீசார் விசாரணை| Dinamalar

ஆரோவில் பெண் கொலை வழக்கு 5 பேரிடம் போலீசார் விசாரணை

Added : ஜூன் 08, 2012

வானூர்:ஆரோவில் பெண் கொலை வழக்கில், 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஆரோவில் சோலார் கிச்சன் அருகே உள்ள முந்திரி தோப்பில், கடந்த 5ம் தேதி பெண் ஒருவர் எரித்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலை நடந்து மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.


முகம் முழுவதும் சிதைந்துள்ளதால் இறந்த பெண்ணை அடையாளம் காணுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி-தமிழகத்தில் அண்மையில் காணாமல் போனவர்களின் புகைப்படங்களை ஒப்பிட்டு பார்க்க ஆரோவில் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ஆரோவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 5 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X