பொது செய்தி

தமிழ்நாடு

நடிகை ரஞ்சிதா வந்தால் அனுமதிப்போம் : நித்யானந்தாவின் சீடர்

Updated : ஜூலை 28, 2010 | Added : ஜூலை 27, 2010 | கருத்துகள் (85)
Advertisement
நடிகை, ரஞ்சிதா,அனுமதி,நித்யானந்தா, சீடர்

சென்னை :""நடிகை ரஞ்சிதா நல்ல பக்தை; அவர் பிடதி ஆசிரமத்திற்கு வந்தால் அனுமதிப்போம்,'' என்று அகில இந்திய தியான முகாம்களின் மகா ஆச்சாரியார் நித்யஞானானந்தா கூறினார்.


தமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சென்னையில் நேற்று நடத்தப்பட்ட நிருபர்கள் சந்திப்பில் நித்யஞானானந்தா கூறியதாவது:கடந்த நான்கு மாதங்களாக பலரால் பல வகைகளில் எங்கள் நித்யானந்த தியான பீடமும், நித்யானந்தாவும் உண்மைக்குப் புறம்பான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளனர். நேற்று தனியார் "டிவி'யில் பக்தர்கள் புண்படும் படியாக எங்கள் குருநாதரை போலிச் சாமியார் என்று வர்ணித்து செய்தி வெளியிடப்பட்டது. இது எங்களது ஆன்மிக உணர்வை நேரடியாக புண்படுத்தியது. பெங்களூரில் நடிகை மாளவிகா அவரது கணவர் அவிநாஷுடன் கலந்து கொண்ட குருபூர்ணிமா நிகழ்ச்சியை கொச்சைப் படுத்தியதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் சமூக சுதந்திரத்தையும், தனிமனித சுதந்திரத்தையும் பாதிக்கிற வகையில் செயல்படுபவர்கள் மீது தமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சட்டப்படி வழக்கு தொடர்வோம். இவ்வாறு நித்யஞானானந்தா கூறினார்.


"நித்யானந்தாவும் நடிகையும் இடம் பெறும் வீடியோ பதிவு குறித்தும், ஆண்மையற்றவர் என்று போலீஸ் விசாரணையில் நித்யானந்தா பதில் சொன்னதாகவும் செய்திகள் வந்ததே உண்மையா?' என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நிருபர்கள் கேட்டனர்.


இதற்கு நித்யஞானானந்தா அளித்த பதில்: நித்யானந்தாவும், நடிகையும் இடம் பெற்றதாக வந்த வீடியோ போலியானது. போலீஸ் விசாரணையில் நித்யானந்தா ஆண்மையற்றவர் என்று கூறவில்லை. யாரோ தவறாக இப்படி  சொல்லியுள்ளனர். நடிகை ரஞ்சிதா நல்ல பக்தை. அவர் தற்போது ஆசிரமத்தில் இல்லை. வெளியே எங்கு இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியாது. ரஞ்சிதா ஆசிரமத்திற்கு வந்தால், நான் வாயில் காவலனாக இருந்தால் உள்ளே அனுமதிப்பேன். ரஞ்சிதாவை நித்யானந்தா அனுமதிப்பாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். நித்யானந்தா பிரச்னைக்கு காரணமானவர்கள் யார் என்றும், யார், யார் மீது வழக்கு தொடரப் போகிறோம் என்றும் விரைவில் தெரிவிப்போம். இவ்வாறு நித்யஞானானந்தா கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumaran - Kuwait,குவைத்
28-ஜூலை-201017:58:24 IST Report Abuse
Sukumaran ஒரு உண்மை சம்பவத்தை எப்படி பேசி மூடி மறைக்க முடியும் என்பதற்கு இது ஒரு சரியான உதாரணம்.
Rate this:
Share this comment
Cancel
ர.selvaraju - dharmapuri,இந்தியா
28-ஜூலை-201016:54:25 IST Report Abuse
ர.selvaraju ரஞ்சிதா வந்தால் நான் கூட அனுமதிப்பேன்.
Rate this:
Share this comment
Cancel
நலம் விரும்பி - Dubai,இந்தியா
28-ஜூலை-201016:37:52 IST Report Abuse
நலம் விரும்பி சீடனின் மனக்குறை புரிகிறது.கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விட்டதே?.என் குரு கற்றதை சிஷ்யன் கற்க வேண்டாமா? அதற்குதான் சீடன் அழைக்கிறான்.ரஞ்சிதா கவனம்!!!மீண்டும் சென்றால் பொது கழிப்பிடம் ஆக மாற்றி விடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X