அரசியல் செய்தி

தமிழ்நாடு

அழகிரியின் மாஜி அலுவலகத்தில் மாநகராட்சி "டயாலிசிஸ்' மையம் : ஏற்பாடுகள் தீவிரம்

Added : ஜூன் 22, 2012
Advertisement

மதுரை: மதுரை மாநகராட்சி கைப்பற்றிய, தி.மு.க., மத்திய அமைச்சர் அழகிரியின் எம்.பி., அலுவலகத்தில், "டயாலிசிஸ்' மையம் அமைக்கும் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. தி.மு.க., ஆட்சியில், மாநகராட்சி மண்டலம் 4ன் அலுவலக கீழ்தளத்தை, மதுரை எம்.பி., அலுவலகத்திற்கு அனுமதித்தனர். மத்திய அமைச்சர் அழகிரி பயன்படுத்தி வந்தார். ஆட்சி மாற்றத்திற்கு பின், "மாநகராட்சி நிர்வாக தேவைக்காக எம்.பி., அலுவலகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு எடுக்க,' மேயர் ராஜன் செல்லப்பா தீர்மானம் நிறைவேற்றினார். அதன்படி, எம்.பி., அலுவலகத்தை மாநகராட்சி கைப்பற்றியது. இதற்கிடையில், "15 லட்சத்து 61 ஆயிரம் பேர் கொண்ட மாநகராட்சி மக்கள் தொகையில், 10 சதவீதம் பேர், சிறுநீரக செயல் இழப்பு மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருப்பது,' ஆய்வில் தெரியவந்தது.ஏழைகள் சிகிச்சை பெறும் வகையில், குறைந்த கட்டணத்தில் "டயாலிசிஸ்'(ரத்த சுத்திகரிப்பு) மையத்தை அமைக்க, மேயர் முடிவு செய்தார். கைப்பற்றிய அழகிரியின் அலுவலகத்தை, அதற்காக பயன்படுத்த, அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. உதவி நகர்நல அலுவலர் டாக்டர் பிரியா கூறியதாவது: முதலில் ஐந்து இயந்திரங்கள் வைப்பதாக இருந்தோம். கூடுதல் சேவையை கருத்தில் கொண்டு, 15 இயந்திரங்கள் வாங்க உள்ளோம். சில மாநிலங்களில், சிறப்பான "டயாலிசிஸ்' சேவையாற்றி வரும் ஜெர்மன் நிறுவனத்துடன் பேசி வருகிறோம். மையம் விரைந்து வர, மேயர், கமிஷனர் ஆர்வம் காட்டுகின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X