சம்பவம் செய்தி

தமிழ்நாடு

"நரபலி சிறுவனின்' தாய்க்கு அடுத்தடுத்து சோகம்

Updated : ஜூலை 29, 2010 | Added : ஜூலை 28, 2010
Advertisement

மதுரை :இரண்டு வயதில் மாயமான தந்தை; திருமணமான இரண்டு ஆண்டில் விபத்தில் கணவர் மரணம்; "தாயின் கண்ணீர் துடைப்பான்,' என நினைத்த மகனும் "நரபலி' கொடூரத்திற்கு பலி. இப்படியொரு துயர சம்பவம் அபலை பெண்ணிற்கு அடுத்தடுத்து நேர்ந்துள்ளது.


மதுரை முனிச்சாலை பத்தாவது தெருவை சேர்ந்த சமையல் மாஸ்டர் மாபுபாட்ஷா. இவரது மனைவி சுல்தான் பீவி. இவர்களுக்கு செரின் பாத்திமா (24) என்ற மகளும், அசன் (22) என்ற மகனும் உள்ளனர். செரின் பாத்திமாவிற்கு இரண்டு வயது இருக்கும்போது, தந்தை மாபுபாட்ஷா மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் பயனில்லை. பிழைப்புக்கு வழியின்றி தவித்த சுல்தான்பீவிக்கு, அவரது தம்பி அக்பர்அலி ஆதரவு தந்தார். செரின் பாத்திமா, ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின், தாய்க்கு உதவியாக இருந்தார்.செரின் பாத்திமாவிற்கும், எஸ்.குலமங்கலத்தை சேர்ந்த கொத்தனார் கவுகர்பாட்ஷாவிற்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பெண்ணிற்கு 15 சவரன், 40 ஆயிரம் ரூபாய் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டன. தாய்மாமன் கடமையை முடித்த திருப்தியில் அக்பர்அலி இருந்தார். இரண்டு வயதில் தவிக்கவிட்டு விட்டு தந்தை பிரிந்து சென்றதால், சிறு வயதில் மனதில் ஏற்பட்ட காயத்திற்கு கணவரின் அன்பு ஆறுதலாக இருந்தது.


செரின்பாத்திமாவிற்கு ஆண் குழந்தை பிறந்ததால் குடும்பத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி. குழந்தைக்கு காதர்யூசப் என பெயர் சூட்டினர்.மூன்று மாதத்திற்கு முன் நடந்த விபத்தில் கணவரும் பலியானார். ஆதரவற்ற நிலையில் மீண்டும் தாய் மாமன் வீட்டில் குழந்தையுடன் தஞ்சம் புகுந்தார் செரின்பாத்திமா. காதர்யூசப்பிற்கு ஒரு வயதானது. அவனுக்கு கோரிப்பாளையம் பள்ளிவாசல் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கடந்த 1ம் தேதி குழந்தையுடன், செரின்பாத்திமா வந்தார். அவருக்கு துணையாக தாயார் சுல்தான்பீவியும் வந்தார். அங்கு காதர்யூசப் கடத்தப்பட்டு "நரபலி' கொடூரன் அப்துல்கபூரால் கொலை செய்யப்பட்டான்.


இரண்டு வயதில் மாயமான தந்தை; திருமணமான இரண்டு ஆண்டில் விபத்தில் கணவர் மரணம்; மகனும் "நரபலி' கொடூரத்திற்கு பலி. இப்படியொரு துயர சம்பவம் செரின் பாத்திமாவிற்கு அடுத்தடுத்து நேர்ந்துள்ளது. திக்குத்தெரியாமல் தவிக்கும் செரின் பாத்திமாவின் துயரம் துடைக்க, கருணை அடிப்படையில் அரசு தரப்பில் உதவிகள் மேற்கொள்ள வேண்டும்.


Advertisement




வாசகர் கருத்து

நந்தகோபால் - kuwait,குவைத்
29-ஜூலை-201020:15:02 IST Report Abuse
நந்தகோபால் எல்லாம் வல்ல இறைவன் இப்பெண்ணின் ஆரா துயரத்திற்கு மருந்து தர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். கண்டிப்பாக இப்பெண்ணிற்கு தமிழக அரசு நிவாரணம் தர வேண்டும். அத்தோடு இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு தக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
சதீஷ் - Chennai,இந்தியா
29-ஜூலை-201019:46:13 IST Report Abuse
சதீஷ் government should investigate this and give a solution for her.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X