பொது செய்தி

தமிழ்நாடு

சங்கர நேத்ராலயா பற்றிய "இன் - சைட்' நூல் வெளியீடு

Added : ஜூலை 07, 2012
Share
Advertisement

சென்னை: சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் தோற்றம், வளர்ச்சியை விவரிக்கும், "இன் - சைட்' எனும் நூல் வெளியிடப்பட்டது. சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை தோற்றம், வளர்ச்சி, மருத்துவ சேவை, எதிர்கால திட்டம் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய, "இன்-சைட்' எனும், ஆங்கில நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, நுங்கம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை கலையரங்கில் நேற்று நடந்தது. எழுத்தாளர் ரங்கநாதன், பத்திரிகையாளர்கள் ஜார்ஜ் ஸ்காரியா, மீரா பிரசாத் ஆகியோருடன் இணைந்து, எழுதியுள்ள இந்நூலை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் வெளியிட, சங்கர நேத்ராலயா கண் மருத்துவ ஆராய்ச்சி நிறுவன ஆட்சிக்குழு உறுப்பினர் அசோக் குமார் மேத்தா பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் மயில்வாகனன் நடராஜன் பேசும்போது, ""சங்கர நேத்ராலயா கண் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு, கண் மருத்துவத்தில் முதுநிலை பட்டப்படிப்பு துவங்க இதுவரை, இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதி கிடைக்காதது வருந்தத்தக்கது,'' என்றார். நிகழ்ச்சியில், சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் பத்ரிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பத்திரிகையாளர் கோவிந்தராஜ் எத்திராஜ் தலைமையில், "இந்தியாவில் சுகாதார சேவை - மேம்படுத்தப்படும் முன்னுதாரணங்கள்' எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X