சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நான்கு பெண்களுடன் திருமணம் : "ஜாலி' கல்யாண மன்னன் கைது

Added : ஜூலை 30, 2010
Advertisement

கோவை : நான்கு பெண்களை திருமணம் செய்து, வரதட்சணை பணத்தில் ஜாலியாக உல்லாச வாழ்க்கை அனுபவித்த நபர் கைது செய்யப்பட்டார். கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ்(36); டிரைவர். இவர் சில ஆண்டுகளுக்கு முன், கேரளாவைச் சேர்ந்த சாம்லா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தகவலை மறைத்து இரண்டாவதாக செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ரம்லத் நிஷா(27) என்பவரை 2005ல் திருமணம் செய்து கொண்டார். தெரிந்து ஒருவருடனும், தெரியாமல் மற்றொருவருடனும் குடும்பம் நடத்தி வந்த இலியாஸ், மூன்றாவதாக சோபியா என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். நான்காவதாக கேரளாவைச் சேர்ந்த மற்றொரு ரம்லத் நிஷாவையும் திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் இவரது நிஜ முகம் பற்றி அறிந்த இரண்டாவது மனைவி ரம்லத் நிஷா, முகமது இலியாசிடம் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து, வரதட்சணை கேட்டு முகமது இலியாஸ் துன்புறுத்தினார். செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ரம்லத் நிஷா புகார் அளித்ததையடுத்து, முகமது இலியாஸ் கைது செய்யப்பட்டார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X