பிரிட்டன் பிரதமர் பேச்சில் அதிருப்தி : சர்தாரியின் பயணம் ரத்து?

Updated : ஜூலை 31, 2010 | Added : ஜூலை 30, 2010 | கருத்துகள் (28)
Share
Advertisement

இஸ்லாமாபாத் : டேவிட் கேமரூன் கூறிய கருத்தால் அதிருப்தியடைந்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், அந்நாட்டு அதிபர் சர்தாரி மேற்கொள்ள உள்ள பிரிட்டன் பயணத்தை ரத்து செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது.

இந்திய பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் குறிப்பிடுகையில், "ஆப்கானிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாது' என கூறியிருந்தார். பிரிட்டன் பிரதமரின் இந்த கருத்துக்கு, பாகிஸ்தானிய ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் கிலானி குறிப்பிடுகையில், "பிரிட்டன் பிரதமரின் இதுபோன்ற கருத்துக்களால் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடும்' என்றார்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி குறிப்பிடுகையில், "பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஒட்டு மொத்தமாக பாகிஸ்தான் அரசு மீது குறை கூறுவதை ஏற்க முடியாது. தவறான இந்த கருத்துக்களை கண்டிக்கிறோம்' என்றார். "பாகிஸ்தான் மீது குறை கூறியதில் மாற்றம் ஏதும் இல்லை; உண்மையைத் தான் தெரிவித்துள்ளேன்' என கேமரூன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரான்ஸ் நாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்த மாதம் 3ம் தேதி பிரிட்டன் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். பிரதமர் கேமரூனின் கருத்தால் கோபமடைந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், அதிபர் சர்தாரி, பிரிட்டன் பயணத்தை தவிர்க்க வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளது. ஆனால், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் தனது மகனை பார்ப்பதற்காக அதிபர் சர்தாரி செல்கிறார். இதனால், அவர் தனது பிரிட்டன் பயணம் சொந்த காரணங்களுக்காக என்று கூறி அவர் சமாளிக்கக்கூடும். ஏனெனில், அம்மாதிரி முடிவை எடுக்க அமெரிக்கா அனுமதிக்க வாய்ப்பில்லை.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
E .GURUSAMY - NIGERIA,இந்தியா
31-ஜூலை-201023:00:34 IST Report Abuse
E .GURUSAMY ஒபாமா கூறமாட்டார்,காரணம் பாகிஸ்தானியர் அமெரிக்காவில் குண்டு வய்துவிடுவார்ஹல்,அதற்காஹதான் அவர்ஹளுக்கு வருடம் தோறும் கப்பம் கட்டுஹிரார்ஹல்.இவர்ஹளும் அந்த பணத்தில் திமிருஹிரார்ஹல்.
Rate this:
Cancel
raja - saudi,இந்தியா
31-ஜூலை-201019:29:13 IST Report Abuse
raja வோட்டுக்க அரசியல் பண்ணும் நம் அரசியலுக்கு இன்னொருவர் தைரியம் கொடுக்க வேண்டிஉள்ளது.
Rate this:
Cancel
saravanan - tirupur,இந்தியா
31-ஜூலை-201014:59:41 IST Report Abuse
saravanan பாகிஸ்தானை திருத்தவே mudiyathu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X