பொது செய்தி

இந்தியா

ஜாமின் வழங்க ரூ. 100 கோடி லஞ்சம் தர முன்வந்த அரசியல் குடும்பம்: நீதிபதி பரபரப்பு தகவல்

Added : ஜூலை 20, 2012 | கருத்துகள் (35)
Share
Advertisement
ஜாமின் வழங்க ரூ. 100 கோடி லஞ்சம் தர முன்வந்த அரசியல் குடும்பம்: நீதிபதி பரபரப்பு தகவல்

ஐதராபாத்: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டிக்கு ஜாமின் வழங்க, அவர் குடும்பத்தினர் தமக்கு ரூ. 100 கோடி வரை லஞ்சம் தர தயாராக இருந்ததாக, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளநீதிபதி லட்சுமி நரசிம்ம ராவ் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.


கர்நாடக மாநிலம், பெல்லாரியில் ஓபுலாபுரம் சுரங்க நிறுவனம் நடத்தி வந்தவர், மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி. இவர் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு, தற்போது பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீதான வழக்கு, ஐதராபாத்தில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை, முதன்மை கூடுதல் சிறப்பு நீதிபதி டி.பட்டாபிராம ராவ் விசாரித்து வந்தார். ஜனார்த்தன் ரெட்டி ஜாமின் வழங்கக்கோரி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு ஜாமின் வழங்கினால், சாட்சிகளை கலைத்து விடுவார் எனக் கூறி, அதற்கு சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது.


இந்நிலையில், அவருக்கு மே 11ம் தேதி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இந்நிலையில், அவரை ஜாமினில் விடுவிக்க, 1.80 கோடி ரூபாயை நீதிபதி பட்டாபிராமராவ் லஞ்சம் பெற்றார் என, சி.பி.ஐ., கண்டறிந்தது. ஐதராபாத்தில் உள்ள வங்கி லாக்கரில் கணக்கில் வராத, ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் இருந்ததை, சி.பி.ஐ., கண்டுபிடித்து கைப்பற்றியது. அந்த லாக்கரின் சாவி, நீதிபதி பட்டாபிராமராவின் மகனிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இதை அடுத்து, நீதிபதி பட்டாபிராமராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


இவ்வழக்கு தொடர்பாக இம்மாத துவக்கத்தில் மேலும் இரண்டு நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரான லட்சுமி நரசிம்ம ராவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஜனார்த்தன் ரெட்டி ஜாமினில் வெளிவர அவரது குடும்பத்தினர் தனக்கு ரூ. 100 கோடி வரை தர முன்வந்ததாக தெரிவித்துள்ளார். கர்நாடக முன்னாள் அமைச்சர் ஒருவர் ஜாமினில் வெளிவர ரூ. 100 கோடி வரை லஞ்சம் தர முன்வந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்
21-ஜூலை-201217:42:20 IST Report Abuse
jaikrish ரெட்டி...பண முதலை..கனிம வளங்களை விழுங்கி விழுங்கியே வீங்கிபோனவன்.திருடுவது சுரங்கத்திலிருந்து..வகிப்பது சுரங்க துறை மந்திரி பதவி.வாழ்க ஜன நாயகம். கட்சிகள் காவிரியை வைத்தே அரசியல் செய்து கன்னட மக்களை ஏமாற்றி பிழைப்பை ஓட்டுகின்றன...
Rate this:
Cancel
Cheenu Meenu - cheenai,இந்தியா
21-ஜூலை-201215:53:51 IST Report Abuse
Cheenu Meenu நூறு கோடி லஞ்சம் தர முன் வந்தார்கள் என்றால் எத்தனை கோடிகள் நேர்மையற்ற முறையில் சம்பாதித்து இருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். நாடு இப்படி பட்டவர்கள் தான் கையில் சிக்கிக்கொண்டு உள்ளது.
Rate this:
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
21-ஜூலை-201212:26:15 IST Report Abuse
Ramasami Venkatesan இதற்கெல்லாம் ஒரே நிவாரணம் - நடக்க முடிந்தால் - போலீஸ், சி பி ஐ, சுப்ரீம் கோர்ட், எலெக்சன் கமிசன் எல்லாம் ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் - ஜனாதிபதியும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் - அப்போதுதான் பாரபட்சமில்லாத ஒரு நாடாக உருவாக முடியும். அல்லது இவைகள் சுய கட்டுப்பாட்டில் சுதந்திரமாக செயல்பட வேண்டும். 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் சுப்ரீம் கோர்ட் செயல்படுவதுபோலே. இல்லையெனில் மெஜாரிட்டி கட்சியின் சர்வாதிகாரம் தான் தொடரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X