சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் மீது தாக்மாஜி பா.ம.க., அமைச்சர் உட்பட 100 பேர் மீது வழக்குகுதல்

Added : ஜூலை 31, 2010
Advertisement

சென்னை: ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்தை மீட்கச் சென்ற அறநிலையத் துறை துணை கமிஷனர் உள்ளிட்ட அரசு ஊழியர் களை பணி செய்ய விடாமல் தடுத்து, அடித்து விரட்டிய பா.ம.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம் உள்ளிட்ட 100 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வடபழனி ஆண்டவர் கோவிலுடன் இணைந்த  காசி விஸ்வநாதசுவாமி கோவில் பரங்கிமலையில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக 39 ஆயிரத்து 782 சதுரடி நிலப்பரப்பு பரங்கிமலை பட்ரோட்டில் அமைந்துள்ளது. அதில் 3,000 சதுரடிக்கு கட்டடம் உள்ளது. கட்டடத்தின் வாடகைதாரர் சுகந்தமணி என்பவருக்கு, கடந்த 1989 முதல் ஐந்து ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில், வன்னியர் சங்கம் என்ற அமைப்புக்கு கோவில் மற்றும் துறை அனுமதியின்றி உள்குத்தகைக்கு விடப்பட்டதாக தெரிகிறது. கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக வன்னியர் சங்கம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம், கடந்த1991ம் ஆண்டு பூந்தமல்லி கோர்ட்டில் வெளியேற்று வழக்கை தொடுத்தது. இவ்வெளியேற்று வழக்கில், அச்சங்கத்தின் சார்பில் ஆஜராகி பல்வேறு காரணங்களுக்காக வெளியேற்று மனுவை நிறைவேற்ற இயலாதபடி, பல வாய்தாக்கள் சென்றன. போதுமான அவகாசம் கோர்ட் அளித்தும் வன்னியர் சங்கம் தரப் பில் ஆதாரங்கள் இல்லாததால், இறுதியாக வெளியேற்று நடவடிக்கையை நிறைவேற்றுமாறு ஆலந்தூர் கோர்ட் உத்தரவிட்டது. ஆலந்தூர் முனிசிபல் கோர்ட் உத்தரவை செயலாக்குவதற்காக, இந்து சமய அறநிலையத்துறையின் துணை கமிஷனர் காவேரி தலைமையில், திருவேற்காடு கோவில் துணை கமிஷனர் ஜெயராமன் மற்றும் வடபழனி ஆண்டவர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் கண்மணி, கோவில் ஊழியர்கள், வன்னியர் சங்கத்திற்கு சென்றனர். வன்னியர் சங்கம் பெயரில் இயங்கிய கட்டடத்தை ஆலந்தூர் கோர்ட் அமீனா மூலம் மீட்டு, பின் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதையறிந்த, பா.ம.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம் ஆகியோர் வன்னியர் சங்க கட்டடத்திற்கு வந்து, பூட்டிய சீலை உடைத்து கோவில் பணியாளர்களை கற்கள் மற்றும் கம்புகளை கொண்டு தாக்கினர். அறநிலையத் துறை  துணை கமிஷனர் காவேரியின் காரை கல்லால் அடித்து சேதப்படுத்தினர். மேலும், கார் டிரைவர் அஜய்,  துணை கமிஷனர் காவேரி மற்றும் அறநிலையத்துறை  ஊழியர்களை பா.ம.க.,வினர் சரமாரியாக தாக்கினர். இது குறித்து துணை கமிஷனர் காவேரி, பரங்கிமலை போலீஸ் ஸ்டேஷனில், "அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்து, அவர்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, அரசு வாகனத்தையும் சேதப்படுத்திய முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம் உட்பட 100 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என குறிப்பிட்டு புகார் மனு அளித்தார். இதையடுத்து, முன்னாள்  மத்திய ரயில்வே அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம் உள்ளிட்ட 100 பேர் மீது ஐ.பி.சி., பிரிவு 147, 148, 332, 506/2, 427 ஆகிய பிரிவுகளில் பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X