பொது செய்தி

தமிழ்நாடு

நடப்பாண்டு மழை பொய்த்ததால் அவலம் திருவாரூரில் ஆறு, குளங்களில் வறட்சி

Added : ஜூலை 26, 2012 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டத்தில், வழக்கமாக பெய்யும் அளவுக்கு நடப்பாண்டு மழை பெய்யாததால் ஆறு, குளங்களில் கடும் வறட்சி நிலவுவதால் குடிநீருக்கு கூட வழியின்றி, பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், வறட்சி மாவட்டமாக அறிவித்து, நிவாரணப்பணிகளை முடுக்கி விட வேண்டுமென, தமிழக அரசை பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், கடந்த 2003ம் ஆண்டு கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது. இதேநிலை நடப்பாண்டும் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு மேட்டூர் அணையில் ஜூன் மாதம் ஆறாம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக சாகுபடிதங்குதடையின்றி நடந்தது.ஆனால், நடப்பாண்டில் ஜூலை மாதம் இறுதியை தொட்டுள்ள போது கூட, மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும், கர்நாடகா அணைகளிலிருந்து காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படாததாலும் டெல்டா பாசன மாவட்டங்களில் தண்ணீரின்றி சாகுபடி பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடப்பாண்டு கோடை மழையும் போதிய அளவு பெய்யாமல் விவசாயிகளை வஞ்சித்து விட்டது. இதனால், திருவாரூர் மாவட்டத்தில் ஆறு, குளங்களில் கொஞ்சநஞ்சம் இருந்த தண்ணீரையும் ஏரி, குளம் கட்ட தொழிலாளர்கள் இறைத்து விட்டனர். எனவே, தண்ணீர் இல்லாமலும், கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் நீரேற்றுமிடத்தில் சரியான அளவு தண்ணீர் கிடைக்காததால் வாரத்துக்கு மூன்று தினங்கள் மட்டுமே திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.நிலத்தடி நீர்மட்டம் முழுவதும் குறைந்து விட்டதால், அடிக்குழாய் பம்ப்களில் தண்ணீர் வருவதில்லை. இதனால், பொதுமக்கள் குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இப்பிரச்னையை தீர்க்க திருவாரூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, குடிநீரை தங்குதடையின்றி வழங்கவும், விவசாய பாசனம் சீராக நடக்கவும் உரிய நடவடிக்கையை விரைந்து தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென, விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருப்பூர் சேகர் - Tirupur,இந்தியா
27-ஜூலை-201209:58:15 IST Report Abuse
திருப்பூர் சேகர் மழை பெய்தால் இவ்வளவு கோடி கமிஷன் கிடைக்கும், பெய்யும் மழை நீரை தேக்கி வைக்க ஒரு திட்டம் போட்டால் பல கோடி ஊழல் செய்யலாம், தண்ணீர் தேக்கும் தொட்டி கட்டினால் கோடி கோடியாய் கொள்ளை அடிக்கலாம். என்று யாராவது ஒரு புராஜக்ட் கொடுத்தால் உடனே நடக்கும். அதை விட்டுபுட்டு, மக்களுக்கு பாதிப்பு நன்மை செய்யுங்கள் என்று சொன்னால்... சிரிப்பு தான் வருகிறது எனக்கு... பழைய நியூஸ் பேப்பர்களை படியுங்கள் 50 வருசமா தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திற்கும் மாதத்திற்கு தகுந்தாற் போல் ஒரே செய்திகள் தான் உள்ளது. என்ன வருசங்கள் தான் மாறியுள்ளது. வாழ்க தமிழக தலைவர்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X