பொது செய்தி

தமிழ்நாடு

நீர்வழி தடங்களை சுத்திகரிக்க ரூ.300 கோடி நிதி: கூவம் ஆற்றில் நீச்சல் சாத்தியமாகும்?

Updated : ஜூலை 28, 2012 | Added : ஜூலை 26, 2012 | கருத்துகள் (30)
Advertisement

சென்னை: சென்னையின் பிரதான நீர்வழி தடங்களான அடையாறு, கூவம் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, 300 கோடி ரூபாய் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை நகரின் பொருளாதார மற்றும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, கட்டமைப்பு வளராததால், இயற்கை ஆதாரங்களில் கழிவுநீர் மற்றும் குப்பை கொட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால், கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் "செத்து'விட்டதாக அண்ணா பல்கலை, கடந்த வாரம், அரசிடம் அறிக்கை கொடுத்தது. அதன்படி, இந்த நீர்வழிகளில், கலக்கும் தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதி கழிவுநீரால், ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து, எந்த வகை உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த ஆய்வு நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த நீர்வழிகளின் நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப் படுகிறது.


துவங்கவில்லை: முந்தைய தி.மு.க., ஆட்சியின் போது, அடையாறு, கூவம் ஆறுகள் சுத்தப் படுத்தப் படும் என்று, அறிவிக்கப் பட்டது. ஆனால், அதற்கான முதல்கட்ட பணிகள் கூட துவக்கப் படவில்லை. ஆய்வின் பேரில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சில "மாஜி'க்கள் சிங்கப்பூர் பயணம் மட்டும் மேற்கொண்டனர். இந்த நிலையில், சென்னையின் பிரதான நீர்வழி தடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, 337 இடங்களில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.


அரசு உத்தரவு: இது குறித்து,நேற்று, அரசு வெளியிட்ட அறிக்கை விவரம்: சென்னை நகர நீர்வழி பாதைகளில் கழிவுநீர் கலக்க கூடிய, கூவம் ஆற்றில், 105 இடங்கள்; பக்கிங்ஹாம் கால்வாயில், 183 இடங்கள், அடையாறில், 49 இடங்கள் என, 337 இடங்களில் கழிவுநீரை சுத்திகரிக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு உள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக, 150 கோடி ரூபாயை தவணை முறையில் சென்னை பெருநகர் குடிநீர் வாரியத்திற்கு விடுவிக்கவும் உத்தரவிடப் பட்டு உள்ளது. இதன்படி, பிரதான கழிவுநீர் குழாய்கள் அமைத்தல், சிறிய அளவிலான குழாய்களை அகற்றி, அதிக லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் உந்து குழாய்கள் அமைத்தல், சாலையோரம் சிறிய கழிவுநீரேற்றும் நிலையங்கள் அமைத்தல், ஏற்கனவே உள்ள கழிவுநீரேற்றும் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றம் ஏற்கனவே உள்ள சிறிய அளவிலான கழிவுநீர் குழாய்களை பெரிய குழாய்கள் கொண்டு மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படும். இதன் மூலம் சென்னையில் சுத்திகரிக்கப் படாத கழிவுநீர் ஆறுகளுடன் கலப்பது தடுத்து நிறுத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vramanujam - trichy,இந்தியா
27-ஜூலை-201216:52:50 IST Report Abuse
vramanujam எங்க வீட்டில் அந்த பத்து விதமான சரும பிரச்சனை வராது .ஏன் என்றால் நாங்கள் தினமும் கூவத்தில் குளிக்கிறோம் .
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
27-ஜூலை-201214:53:21 IST Report Abuse
g.s,rajan "Mudhalvar ninaithaal Mudiyum". Chief minister Jayalalitha can do it,but it will be a great challenge like Veeranam Project. g.s.rajan,chennai
Rate this:
Share this comment
Cancel
T.G.BALASUBRAMANIAN - Chennai,இந்தியா
27-ஜூலை-201210:34:01 IST Report Abuse
T.G.BALASUBRAMANIAN நல்ல முயற்சி. நிறைவேறினால் நன்றாக இருக்கும். கையூட்டு இன்றி நேர் வழியில் சென்று முன்னேற்றத்திற்கு உழைத்தால் நிச்சயம் கூவம் மணக்கும். முடியாது என்பது முட்டாள்களின் வாதம்.
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
28-ஜூலை-201207:56:09 IST Report Abuse
மதுரை விருமாண்டிமுடியாது என்பது முட்டாள்களின் வாதம்..இது இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் முடியும் என்று சொல்வது பகல் கனவு, விதண்டாவாதம் .. ஆளுங்கட்சியும், அரசுத் துறையும் மூச்சு விடாமல் கூட இருந்திடுவான் .. கையை நீட்டாமல் இருந்தால் செத்துப் போய் விடுவான்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X