ரூ.200 க்காக உயிர் காக்கும் கருவி அகற்றம்: பரிதாபமாக இறந்தது ஐந்து நாள் குழந்தை

Added : ஜூலை 26, 2012 | கருத்துகள் (19)
Advertisement
ரூ.200 க்காக உயிர் காக்கும் கருவி அகற்றம்: பரிதாபமாக இறந்தது ஐந்து நாள் குழந்தை

ஜலந்தர்: அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக, 200 ரூபாய் பணத்தை கட்ட, தந்தை தவறியதால், பிறந்து ஐந்து நாளே ஆன குழந்தைக்காக, இணைக்கப்பட்டிருந்த உயிர் காக்கும் கருவிகள் அகற்றப்பட்டன. இதனால், குழந்தை பரிதாபமாக இறந்தது.


பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவரது மனைவி அனிதா. கர்ப்பமாக இருந்த இவருக்கு, 21ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, ஜலந்தர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால், அக்குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் தொற்று இருந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிர் காக்கும் கருவிகள் மூலம், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. அப்போது, உயிர் காக்கும் கருவிகளுக்கான கட்டணமாக, 200 ரூபாய் செலுத்தும்படி, சஞ்சீவ் குமாரிடம், மருத்துவமனை செவிலியர்கள் தெரிவித்தனர். அந்தப் பணத்தைக் கட்ட சஞ்சீவ் குமாரால் முடியவில்லை. அதனால், குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்க இணைக்கப்பட்டிருந்த, உயிர் காக்கும் கருவிகளை, செவிலியர்கள் அகற்றினர். இதனால், பிறந்து ஐந்து நாளே ஆன, சஞ்சீவ் குமாரின் குழந்தை இறந்தது. இதையறிந்த, சஞ்சீவ்குமாரும், அவரின் மனைவியும் கதறி அழுதனர். சம்பவம் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இக்பால் சிங்கிடம் கேட்டபோது, ""நான் வெளியூரில் இருக்கிறேன். இந்த சம்பவம் குறித்து எனக்கு தெரியாது. சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் மதன்மோகன் மிட்டல் கூறுகையில், ""இது எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது,'' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.venkatesan - Singapore  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-201209:42:44 IST Report Abuse
R.venkatesan கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் venkaesh.Singapore.
Rate this:
Share this comment
Cancel
A SURESH - Chennai,இந்தியா
30-ஜூலை-201209:11:16 IST Report Abuse
A SURESH ஏற்று கொள்ள முடியாத குற்றம், இதற்க்கு காரணம் டாக்டர் மற்றும் செவிளியர்களாக இருந்தால் கண்டிப்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
venpuravy - Dammam,சவுதி அரேபியா
28-ஜூலை-201215:59:08 IST Report Abuse
venpuravy ஒரு பக்கம் கோடி கோடி யா கொள்ளை அடிச்சு ஏமாற்றி சம்பாதிகுற கூட்டம், இன்னொரு பக்கம் 200 ருபாய் கூட இல்லாத வருமையில வேதனை படுகுற கூட்டம், என்ன உலகம், மனசு வலிக்குது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X