5 மாவட்டங்களை வறட்சியாக அறிவித்தது ராஜஸ்தான்

Updated : ஆக 02, 2012 | Added : ஆக 02, 2012
Share
Advertisement

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தனது 5 மாவட்டங்களை வறண்ட மாவட்டமாக அறிவித்துள்ளது.பருவ மழை பொய்த்துப்போனதால், வட மாநிலங்கள் சில கடும் வறட்சியை சந்தித்து வருகின்றன. 5 மாநிலங்களுக்கு ரூ.19 ஆயிரம் கோடியை நிவாரணமாக வழங்கப்படும் என நேற்று மத்திய அமைச்சர் சரத்பவார் அறிவித்தார். இந்நிலையி்ல் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள ராஜஸ்தான், 5 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநில பேரிடர் மேலான்மை கூட்டம் முதல்வர் அசோக் ‌கெலாட் தலைமையில் கூடியது. கூட்டத்திற்கு பின்னர் ராஜஸ்தானின் ஜோத்பூர்,பார்மர், ஜெய்சல்மார், பைகானர், நகாவோர் ஆகிய 5 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து அரசாணை வெளியிட்டார். இம்மாவட்டங்களி்ல் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்பிக்குமாறு கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X