சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து மாணவியை ஆபாச படம் எடுத்த வாலிபர்

Added : ஆக 05, 2012
Advertisement

திருவண்ணாமலை : கல்லூரி மாணவிக்கு குளிர் பானத்தில் மது கலந்து கொடுத்து, ஆபாச படம் எடுத்த இரண்டு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த இசுக்கழி காட்டேரி பன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரியா, 18. (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் திருவண்ணாமலையில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார், இவருடன் அதே கிராமத்தை சேர்ந்த வினோத், நட்புடன் பழகி வந்துள்ளார். ஜனவரி மாதம் பிரியா கல்லூரியை முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார்.
அப்போது, வினோத், பிரியாவிடம் ஆடு தொட்டி தெருவில் உள்ள, தன் அத்தை வீட்டுக்கு சென்று வரலாம் என கூறி அழைத்து சென்றுள்ளார். அங்கு பிரியாவுக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளார், அதை குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கினார். அப்போது, வினோத், தன் மொபைல் போனில் மாணவியை ஆபாசமாக படம் பிடித்து உள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த பிரியா, தனக்கு உடல் நிலை சரியில்லை என நினைத்து, வீட்டுக்கு சென்று விட்டார்.
மொபைல் போனில் இருந்த ஆபாச படத்தை வினோத், தன் லேப்-டாப்பில் ஏற்றி நண்பர் செந்தில்குமார் என்பவருக்கும் காட்டி உள்ளார். இது குறித்து பிரியாவுக்கு தெரிந்தது, வினோத்திடம் பிரியா, "ஏன்? ஆபாச படம் எடுத்தாய்' என, கண்டித்துள்ளார். அப்போது, "நான் தவறு செய்து விட்டேன், இதை அழித்து விடுகிறேன்' என, கூறினார். இதை அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வினோத்தை கண்டித்துவிட்டு சென்றனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பிரியாவின் ஆபாச படம், பலரது மொபைல் போனில் பரவி உள்ளது. அந்த படத்தை வினோத், தன் நண்பர்கள் மொபைல் போன்களுக்கு பரப்பி உள்ளார். இதையறிந்த மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார், வினோத் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X