பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு முழுமையான தாய்ப்பால் ஊட்டுவதில் பின்தங்கிய நிலையில் தமிழகம்

Added : ஆக 07, 2012 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: குழந்தைகள் பிறந்து முதல் ஆறு மாதத்திற்கு, முழுமையாக தாய்ப்பால் ஊட்டுவதில், இந்தியளவில் தமிழகம், 20வது இடத்தில் உள்ளது என, ஒரு புள்ளி விவரம் அதிர்ச்சி தெரிவிக்கிறது. குழந்தைகள் பிறந்து, முதல் ஆறு மாதத்திற்கு, அவர்களுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும் என, மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். இதனால், கர்ப்பமடைவதற்கு முன் இருந்த மாதிரியே, வயிறு சுருங்குவது,
குழந்தைகளுக்கு முழுமையான தாய்ப்பால் ஊட்டுவதில் பின்தங்கிய நிலையில் தமிழகம்

சென்னை: குழந்தைகள் பிறந்து முதல் ஆறு மாதத்திற்கு, முழுமையாக தாய்ப்பால் ஊட்டுவதில், இந்தியளவில் தமிழகம், 20வது இடத்தில் உள்ளது என, ஒரு புள்ளி விவரம் அதிர்ச்சி தெரிவிக்கிறது. குழந்தைகள் பிறந்து, முதல் ஆறு மாதத்திற்கு, அவர்களுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும் என, மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். இதனால், கர்ப்பமடைவதற்கு முன் இருந்த மாதிரியே, வயிறு சுருங்குவது, மார்பகப் புற்றுநோய், கர்ப்பப் பை வாய் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவது, அடுத்த கர்ப்பத்திற்கான கால இடைவெளி நீட்டிக்கப்படுவது என, தாய்க்கு பல நன்மைகள் உள்ளன. இதுபோல், நோய் தொற்றுகளை தடுத்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, தாயுடனான பிணைப்பைக் கூட்டுவது, மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சியை அதிகரிப்பது என, குழந்தைக்கு பல நன்மைகள் உள்ளன. ஆனால், குழந்தைகள் பிறந்து முதல் ஆறு மாதத்திற்கு, அவர்களுக்கு, முழுமையாக தாய்ப்பால் ஊட்டுவதில், இந்தியளவில் தமிழகம், 20வது இடத்தில் உள்ளது என, ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து, எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை இயக்குனர் ஜெயா கூறியதாவது: இந்தியளவில், முதல் ஆறு மாதம், முழுமையாக தாய்ப்பால் ஊட்டும் விகிதம், தமிழகத்தில், 33.3 சதவீதமாக தான் உள்ளது. இது, தமிழகத்தில், பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம், ஒரு மாதத்தில், 1,000க்கு 18; இளம் குழந்தைகள் இறப்பு விகிதம், ஒரு ஆண்டிற்கு, 24 ஆகவும் இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவில் இந்த இறப்பு விகிதங்கள், முறையே, 39 மற்றும், 57ஆக உள்ளன. பல மாதங்கள் தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்தால், தங்கள் அழகு கெட்டு விடும் என்ற, பெண்களின் பொதுவான மனநிலையே, அவர்கள் குழந்தைகளுக்கு சரிவர தாய்ப்பால் கொடுக்காததற்கு முக்கிய காரணம். இதுகுறித்து, இளம் தாய்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, எங்கள் மருத்துவமனையில் ஒரு வாரம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஜெயா கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijayakumar - accra,கானா
08-ஆக-201217:22:43 IST Report Abuse
vijayakumar தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியாததற்கு ஆண்கள் தான் காரணம் என்று நினைக்கிறேன்...... புரிஞ்சுடுத்தா ?
Rate this:
Cancel
Vincillin Eby - doha,கத்தார்
08-ஆக-201214:52:37 IST Report Abuse
Vincillin Eby பல தாய்மார்களும் வேலைக்கு போவதால் தங்களின் மார்பு எடுப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு காரணம்.பிள்ளைகளின் உடல் நலத்தை விட தங்கள் அழகு பெரிதாக இருப்பதால் இனி வருங்கால தாய்மார்களிடம் நல்ல விசயங்களை அதிகம் எதிர்பார்க்க முடியாது.தற்போதைய குழந்தை வளர்ப்பு முறையை பார்த்தால் நமக்கு தெளிவாகும். குக்கிராமங்களிலும் இந்த வகை நோய் பரவி இருக்கிறது. தாயாக திருந்தா விட்டால் நாமாக என்ன செய்ய முடியும்.இதற்கு கணவன்மார்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவை.குழந்தையின் ஆரோக்கியத்தில் தந்தைக்கும் பங்கு உண்டு என்பதை மறக்க கூடாது.
Rate this:
Cancel
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
08-ஆக-201204:06:13 IST Report Abuse
v.sundaravadivelu "அந்த" விஷயத்தில் சர்வே எடுத்தால் ஒருக்கால் த.நாடு முதலிடம் வரலாம்.. ஆனால் தாய்ப்பால் விஷயத்தில் இருபதாம் இடமாம்... எது சொகுசோ அதற்கு மட்டும் முக்கியத்துவம் தருவது தமிழன் குணம்... கொஞ்சம் மெனக்கெடுவது என்றால் சுலபத்தில் பின்தங்கி விடுவது நம்முடைய பெரிய பலவீனம்... தான் பத்து மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த குழந்தைக்கு ஓர் ஆறுமாத காலம் பால் தர முடியாத கேவலமான பிடிவாதம் கேட்கவே வெட்கமாக இருக்கிறது... அப்படி என்ன பிசி அவர்கள்?.. சகல நோய் எதிர்ப்பு சக்திகளும் தாய்ப் பாலில் தான் உள்ளதென எல்லா ஆய்வுகளும் சொல்கிற இந்த வேளையில் அதனைத் தவிர்ப்பதென்பது ஆரோக்கியமற்ற ஓர் செயல் என்பதை தெரிவிக்கிறேன்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X