பொது செய்தி

தமிழ்நாடு

கோகோ சாகுபடியில் ஹெக்டருக்கு ரூ.1.65 லட்சம் கூடுதல் வருவாய்

Added : ஆக 01, 2010
Advertisement

பொள்ளாச்சி:தென்னையில் கோகோ ஊடுபயிராக சாகுபடி செய்தால் ஒரு ஹெக்டருக்கு ஆண்டுக்கு 1.65 லட்சம் ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று ஆழியாறில் நடந்த விழாவில் தெரிவிக்கப்பட்டது.தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம், காட்பரி நிறுவனம் இணைந்து ஆழியாறு நகர் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், தமிழகத்தில் நிலையான கோகோ சாகுபடி உற்பத்தி திட்டத்தை துவங்கியது. தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் ஊடுபயிராக கோகோ நடவு செய்யப்பட்டது.தமிழ்நாடு வேளாண் பல்கலை தோட்டக்கலை கல்லூரி முதல்வர் குமார் தலைமை வகித்து பேசும்போது, "கோகோ சாகுபடி மூலம் தென்னை விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இது பற்றியும், அதன் தன்மை, செயல்பாட்டை ஆராய்வதற்கு ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் சிறந்து இடமாக இருக்கும். இங்கு உருவாக்கப்படும் கோகோ கன்றுகள் தரமானதாகவும், உயர் விளைச்சல் கொண்டதாகவும் இருக்கும்' என்றார்.
தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் ராஜமாணிக்கம், தென்னை சாகுபடியில் ஏற்படும் இழப்புகளை தவிர்க்க கோகோ ஊடுபயிராக சாகுபடி செய்ய வேண்டும் என்று பேசினார்.காட்பரி நிறுவனத்தின் அறிவுரையாளர் பெல்லி பேசும்போது, கோகோவுக்கு சிறந்து சந்தை வாய்ப்பு உள்ளது. ஊடுபயிராக கோகோ பயிரிட்டால் ஒரு ஹெக்டருக்கு குறைந்தபட்சம் 1.65 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். அதனால் தென்னை விவசாயிகள் கோகோ சாகுபடி திட்டத்தை துவங்க வேண்டும் என்றார்.தோட்டக்கலைக்கல்லூரி வாசனை மற்றும் மலைப்பயிர் துறை தலைவர் ஜான்சிராணி பேசும்போது, கோகோ ஊடுபயிர் செய்வதன் மூலம் தென்னைக்கு சிறந்த இயற்கை உரம் கிடைக்கிறது. வரும் ஆண்டுகளில் கோகோ பயிரானது தென்னையை விட சிறப்பானதாகவும், விவசாயிகளுக்கு வருமானம் தரக்கூடிய பயிராகவும் இருக்கும் என்றார்.காட்பரி நிறுவன தமிழக மேலாளர் ராஜேஸ், பயிர் நோயியல் துறை இணை பேராசிரியர் ஷீலா, உழவியலர் துறை உதவி பேராசிரியர் வாசுகி ஆகியோர் பேசினர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X