பாக்., இந்துக்கள் இந்தியா செல்ல அனுமதி

Updated : ஆக 10, 2012 | Added : ஆக 10, 2012
Advertisement

இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்ல பாகிஸ்தானிலிருந்து கிளம்பிய 250 இந்துக்கள் வாகா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். சுமார் 7 மணி நேரம் அவர்கள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டனர். அவர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக செல்வதாக வந்த தகவலையடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து அவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் பின்னர் அவர்களை இந்தியாவுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்தியாவுக்குள் செல்லும் பக்தர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருப்பதாகவும், அவர்கள் 33 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் உத்தரவையடுத்து அவர்கள் இந்தியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக அவர்கள் அகதிகளாக செல்வதாக வந்த தகவலையடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் என அதிகாரி ஒருவர் கூறினார். இதனிடையே, இந்தியா வந்துள்ள பக்தர்கள் ஒரு சிலர், இந்தியாவை விட்டு செல்லப்போவதில்லை என கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X