பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் இல்லை; கட்சிக் கொடியும் இல்லை: தேர்தல் விதியை பின்பற்றும் அதிசய கிராமம்

Added : ஆக 12, 2012 | கருத்துகள் (11)
Share
Advertisement
ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிவலிங்காபுரத்தில், டாஸ்மாக் கடைகள் கிடையாது; கட்சிக் கொடிகளையும் ஏற்ற, மக்கள் விடுவதில்லை. இங்கு வரும் கட்சித் தலைவர்கள், கொடி ஏற்ற விரும்பினால், தேசியக் கொடி மட்டும் ஏற்ற, கொடிக் கம்பம் ஒன்று மட்டும் உள்ளது. இதன் கட்டுப்பாடால் இங்குள்ளோர், எந்தவித பிரச்னையின்றி அமைதியுடன் வாழ்கின்றனர். ராஜபாளையத்தில் இருந்து, 18
டாஸ்மாக் இல்லை; கட்சிக் கொடியும் இல்லை: தேர்தல் விதியை பின்பற்றும் அதிசய கிராமம்

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிவலிங்காபுரத்தில், டாஸ்மாக் கடைகள் கிடையாது; கட்சிக் கொடிகளையும் ஏற்ற, மக்கள் விடுவதில்லை. இங்கு வரும் கட்சித் தலைவர்கள், கொடி ஏற்ற விரும்பினால், தேசியக் கொடி மட்டும் ஏற்ற, கொடிக் கம்பம் ஒன்று மட்டும் உள்ளது. இதன் கட்டுப்பாடால் இங்குள்ளோர், எந்தவித பிரச்னையின்றி அமைதியுடன் வாழ்கின்றனர்.


ராஜபாளையத்தில் இருந்து, 18 கி.மீ., தூரத்தில் உள்ளது, சிவலிங்காபுரம். இங்கு, விவசாயம் தான் முக்கிய தொழில். மற்ற கிராமங்களைப் போல, இங்கும், சில ஆண்டுகளுக்கு முன், பஸ் ஸ்டாப் அருகே, கொடிக் கம்பங்கள் அணிவகுத்து நின்றன. இரவு வர வேண்டிய தலைவருக்கு, காலையிலேயே, "மைக் செட்' வைத்து, கிராம அமைதி சூழலுக்கு சவால் விடுவது போன்ற பிரச்னைகளும் நடந்தன. இதற்கு முடிவு கட்ட, கிராமத்தினர் முடிவு செய்தனர். பார்லிமென்ட் தேர்தலும் வந்தது; தேர்தல் விதிப்படி கொடிக் கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன; கொடிமர பீடங்கள் மட்டும் இருந்தன. தேர்தல் முடிந்த பின், பீடங்களில் கொடிக் கம்பங்கள் வைக்க, மக்கள் அனுமதிக்கவில்லை. "தேர்தல் நேரங்களில் மட்டும் ஒலி பெருக்கி உபயோகிக்கலாம்; கட்சிக் கொடிகளுக்கு அனுமதி இல்லை' என்ற நிலையை மக்களே உருவாக்கி விட்டனர்.


அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சீனிவாசன் கூறுகையில், ""இங்கு, கொடிக் கம்பங்கள் தான் இல்லை; கட்சிகள் உண்டு. கிராமத்திற்கு எந்த தலைவர் வந்தாலும், சர்வ கட்சியினரும் சென்று வரவேற்போம். தலைவர்கள் வரும் போது, அந்தந்த கட்சியினர் மட்டும், தெருக்களில் கொடி கட்டுவர். தலைவர்கள் சென்றவுடன், அவர்களாகவே அகற்றி விடுவர்,'' என்றார்.


ஊராட்சி துணைத் தலைவர், ம.தி.மு.க.,வைச் சேர்ந்த, கேசவன், ""இங்கு டாஸ்மாக் கடைக்கும் வழி இல்லை. கடை துவங்க நடந்த முயற்சி, மக்களின் ஒற்றுமையால், முறிந்தது. கொடிமர பீடங்களை அகற்றவும் பேசி வருகிறோம். இங்கு வரும் கட்சித் தலைவர்கள், கொடி ஏற்ற விரும்பினால், தேசியக் கொடியை ஏற்ற மட்டுமே அனுமதிக்கிறோம். இதற்கு அனைவரும் சம்மதித்ததால், பிரச்னை இல்லை. மக்கள் ஒற்றுமையாக இருப்பதால், இது சாத்தியப்படுகிறது,'' என்றார்.


Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
14-ஆக-201211:17:36 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM இதில் இருந்து யைன புரிகிறது அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள் இது போல ஒற்றுமயுடன் அனைவரும் ஒன்று குடி எடுக்கும் எந்த முடிவும் வெற்றி தரும் அங்குல பரியோருக்கு மரியாதையை தருகிறார்கள் ,என்பது புரிகிறது ...
Rate this:
Cancel
Sivakumar Kandasamy - Boston,யூ.எஸ்.ஏ
12-ஆக-201222:11:05 IST Report Abuse
Sivakumar Kandasamy இது மட்டும் இல்லை ஊரெங்கும் மக்கும் குப்பை & மக்காத குப்பைக்கு தனி தனியா தொட்டு வச்சி இருந்தாங்க. முழு பயன் பாட்டுக்கு வரலே. ஆனாலும் நல்ல ஆரம்பம். கடைகளிலே பிளாஸ்டிக் பையும் பயன் படுத்துறது இல்லை
Rate this:
Cancel
Sivakumar Kandasamy - Boston,யூ.எஸ்.ஏ
12-ஆக-201222:06:34 IST Report Abuse
Sivakumar Kandasamy நான் சிவலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவன். 2004 -லிலேயே இந்த மாதிரி பண்ணனும் பேசிகிட்டாங்க. போன எலக்சன் சமயம் வாய்ப்பு வந்து பண்ணி இருகாங்க. இது மட்டும் இல்லை இன்னும் நிறைய நல்ல மாற்றங்கள் எங்க ஊருக்கு தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X