பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளுக்கு வருகிறது "பில்லிங் மிஷின்'

Updated : ஆக 21, 2012 | Added : ஆக 21, 2012 | கருத்துகள் (1)
Advertisement

தமிழகம் முழுவதும், முதல் கட்ட மாக, 2,500 டாஸ்மாக் கடைகளில், "பில்லிங் மிஷின்' வைத்து, விற்பனைக்கான, "பில்' தயாரிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.டாஸ்மாக் கடைகளில், அரசு கணக்கில் வராத மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும், ஊழியர்கள் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதாக, புகார்களும் எழுந்தன.

இதையடுத்து, மாநிலம் முழுவதும், டாஸ்மாக் கடைகளில் சோதனை
நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான ஊழியர்கள், பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், முறைகேடுகளை தடுப்பதற்காக, டில்லி, கேரள மாநிலங்களில் உள்ள, பில்லிங் மஷின் மூலம் பில் தயாரிக்கும் நடைமுறையை, தமிழக அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.அதன்படி, நுகர்வோர் முதலில் பில்லை பெற்று தான், மதுபானத்தை வாங்க முடியும். இதனால், டாஸ்மாக் கடைகளில் நடக்கும் சண்டைகளும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


இது குறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின், நிர்வாகி ஒருவர் கூறிய தாவது:
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையின் போது ஊழியர்களுக்கும், குடிமகன்களுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. சில்லரை தட்டுப்பாடு காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, கூடுதலாக விற்பனை செய்து விடுவதாகவும், நுகர்வோர் புகார்கள் தெரிவிக்கின்றனர்.பில்லிங் மிஷின்கள் முறை அமல்படுத்தும் போது, "குடிமகன்'கள் கேட்கும் சரக்குகளுக்கு பில் போட்டு கொடுக்கப்படும். இந்த பில்லை, பாட்டில் எடுத்துக் கொடுக்கும் ஊழியர்களிடம், "குடிமகன்'கள் கொடுத்து விட்டால், அவர்கள் சரக்கு எடுத்துக் கொடுத்து விடுவர்.


பில்லில் உள்ள விலையை பார்த்து விட்டு, நுகர்வோர் வாக்குவாதம் செய்யவும் வாய்ப்பு இல்லை. சரக்குகளை வாங்க வரும் "குடிமகன்'களும் நீ, நான் என, போட்டி போட்டு, அடித்துக் கொள்ளாமல் வரிசையில் நின்று சரக்குகளை வாங்கிச் சென்றால், ஊழியர்களும், "குடிமகன்'களும் வீண், "டென்ஷன்' அடைய வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madurai mani bharathi - madurai,இந்தியா
22-ஆக-201202:11:56 IST Report Abuse
madurai mani bharathi ரொம்ப நாட்டுக்கு முக்கியம் ....நீங்களும் உங்க டப்பா மசினும் இன்னும் எத்தனை நாளைக்கு உங்க ஆட்டமுனு பார்க்கிறான்..... காந்தி பேர சொல்லி நீங்க வாங்கின சுதந்திரத்தை டாஸ்மாக் பிராந்தி கடைல கொண்டு போய் அடகு வச்சிடானுக நீங்க மட்டும் நல்லா இருங்கடா இந்த பஞ்சம் புடிச்ச நாடும் நாட்டு மக்களும் நாசமா போறானுங்க.....................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X