டீசல் விலையை மத்திய அரசு பொறுப்பிலிருந்து விடும் எண்ணம் இல்லை: சிங்

Updated : ஆக 22, 2012 | Added : ஆக 22, 2012
Share
Advertisement

புதுடில்லி: டீசல், சமையல் எரிவாயு விலைகளை மத்திய அரசின் பொறுப்பிலிருந்து விடுவிக்கும் திட்டம் இல்லை என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாராளுமன்ற ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்து மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறியதாவது;

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்விற்கேற்ப பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தினை சந்தித்து வருகின்றன. இழப்பினை சரிகட்ட மான்யம் வழங்கப்பட்டு வருகிறது.ஏற்கனவே கடந்த 2010-ம் ஆண்டு முதல் பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டினை மத்திய அரசு பொறுப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ளது.

அது போன்று டீசல், சமையல் எரிவாயு விநியோகத்திற்கான விலையையும் மத்திய அரசு பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின்றன. அப்படி ஒரு எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.

தற்போது பொதுவிநியோகத்தின் கீழ் மண்‌ணெண்ணைய் லிட்டர் ஒன்றிற்கு 82 பைசாவும், எரிவாயு சிலிண்டர் ஒன்றிற்கு ரூ. 22.58 பைசாவும் மான்யம் வழங்கப்பட்டு வருகிறது. தவிர சிலிண்டருக்கு (14.2 கிலோ) ரூ. 231-ம் , டீசல் லிட்டர் ஒன்றிற்கு ரூ. 15.55 -வும் இழப்பீடு ஏற்பட்டு வருகிறது. இதனால் கடந்த 2011-12-ம் ஆண்டு நிதியாண்டில் மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1,38,541 கோடி இழப்பீடு ஏற்பட்டது.

இந்நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூ.83,500 கோடியும், எண்ணெய் எரிவாயு நிறுவனத்திற்கு (ஓ.என்.ஜி.சி)க்க ரூ. 55,000 கோடியும் மான்யம் வழங்கியுள்ளது. தற்போதைய நிலையில் டீசல், எரிவாயு விநியோகத்தினை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் எண்ணம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X