"செக்ஸ் வெறிக்கு திருமண பந்தத்தை கொச்சையாக்கிய பெண்ணின் "திடுக் பின்னணி| Backgroud of woman who cheat 5 youths | Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (128)  கருத்தை பதிவு செய்ய

சென்னை:சென்னையில் அடிக்கடி இடத்தை மாற்றி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்த பெண், 10க்கும் மேற்பட்ட வாலிபர்களைத் திருமணம் செய்து ஏமாற்றினார். ஏமாந்த வாலிபர்கள் 5 பேர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். "செக்ஸ்' வெறிக்கு, திருமண பந்தத்தை கொச்சைப்படுத்திய பெண்ணின் வலையில் திருச்சி, கோவை வாலிபர்களும் சிக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் 10க்கும் மேற்பட்ட வாலிபர்களை ஒருவருக்குத் தெரியாமல் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்தவர் செகாநாத், 25. இவர், கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்தவர். அவரது தாயின் நடவடிக்கை சரியில்லாததால், அவரது தந்தை வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறார். ஆண்கள் பலருடன் நெருக்கமாகப் பழகிய செகாநாத், வீட்டிலிருந்து வெளியேறினார்.பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த சித்திஷ், 32 என்ற வாலிபரை, சில ஆண்டுகளுக்கு முன் செகாநாத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. செகாநாத்தின் நடவடிக்கைகள் சரியில்லாததால், அவரிடம் இருந்து சித்திஷ் விவகாரத்து பெற்றார்.

யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் இஷ்டத்திற்கு பல இடங்களில் சுற்றி, பல ஆண்களுடன் பழகி வந்த செகாநாத், விபசாரக் கும்பலிடம் சிக்கினார். பத்தனம் திட்டா பகுதியில் ஹரி என்பவரைத் திருமணம் செய்து, அவருடன் 6 மாதம் வாழ்ந்தார். அவரது வீட்டில் "டிவிடி பிளேயர்', நகையைத் திருடி தலைமறைவானார். திருச்சூரை சேர்ந்த பிஜு என்ற ஊனமுற்ற வாலிபரைத் திருமணம் செய்த செகாநாத், அவருடன் ஒரு வாரம் வாழ்க்கை நடத்தி விட்டு எஸ்கேப் ஆனார். ஏறக்குறைய கேரளாவில் 10க்கும் மேற்பட்ட வாலிபர்களிடம் வார, மாதக் கணக்கில் குடும்பம் நடத்திய செகாநாத், தமிழகத்திற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார்.வேப்பேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்தார். கடைக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களின் மொபைல் போன் எண்ணை வாங்கி, அவர்களிடம், தான் ஒரு அனாதை என்று பேசி வந்தார்.செகாநாத்துடன் கடலை போடும் வாலிபர்களிடம், திடீரென காதலிப்பதாகக் கூறி, அவர்களிடம் பணம் கறந்து, திருமணம் வரை சென்றுள்ளார். ஒரு சிலருடன் முதல் இரவை முடித்ததும், எஸ்கேப் ஆகியுள்ளார்.வேளச்சேரியில் உள்ள தனியார் மொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த செகாநாத்திடம் ஏமாந்த திருவொற்றியூரை சேர்ந்த சரவணன், அடையாறை சேர்ந்த சரவணன் மற்றும் தி.நகரை சேர்ந்த ராஜா ஆகியோர் நேற்று முன்தினம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

அதன் விவரம்:வழக்கறிஞருக்குப் படிப்பதாகக் கூறிய செகாநாத், மேற்படிப்புக்கு பணம் தேவை என கூறினார். எங்களைக் காதலிப்பதாகக் கூறியதால், வருங்கால மனைவி என நினைத்து, லட்சக்கணக்கில் செலவு செய்தோம். எங்களிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென மொபைல் எண்ணை மாற்றி விட்டு, தலைமறைவாகி விட்டார். அவர், எங்களைப் போன்று பல வாலிபர்களை ஏமாற்றி, திருமணம் செய்து நடுத்தெருவில் விட்டுச் சென்று விட்டார். தமிழ், ஆங்கிலம், மலையாளம் உட்பட 6 மொழிகளில் பேசும் அவர் மீது நடவடிக்கை எடுக்க

வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறியிருந்தனர். மூன்று வாலிபர்கள் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க, அடையாறு உதவி கமிஷனருக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே, நேற்று பிற்பகல் எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு போரூரை சேர்ந்த மணிகண்டன், 28, புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னா, 28, ஆகியோர் திருமண போட்டோக்கள் அடங்கிய ஆல்பத்துடன் வந்தனர். அவர்களையும் செகாநாத் திருமணம் செய்து ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது.

"நான் அவள் இல்லை': போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த மணிகண்டன் கூறியதாவது:தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த செகாநாத், 25 என்னிடம் மொபைல் போனில் அடிக்கடி பேசி காதலிப்பதாகக் கூறினார். வீட்டிற்கு தெரியாமல் நாங்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டோம்.எனது பெற்றோருக்குத் தெரிய வந்ததும், கடந்த 2011 ல், எங்களுக்கு குன்றத்தூர் முருகன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. என்னுடன் 2 மாதம் தான் வாழ்ந்தார்.ஐ.ஏ.எஸ்., தேர்வுக்குத் தயாராவதால், வீட்டில் இருந்து படிக்க முடியவில்லை என தெரிவித்தார். சைதாப்பேட்டை கோர்ட்டிற்கு பின்புறமுள்ள மகளிர் விடுதியில் செகாநாத்தை சேர்த்து விட்டேன்.வாரம் ஒரு முறை சென்று அவரைப் பார்த்து வந்தேன். செகாநாத் வேறு சில ஆண்களுடன் பழகும் தகவல் எனக்குக் கிடைத்தது. அது பற்றி அவரிடம் கேட்டபோது, "நான் அவள் இல்லை' என மறுத்தார்.ஒரு கட்டத்தில் என்னை விட்டு முழுமையாக விலகி விட்டார். வெளியில் தெரிந்தால் அசிங்கம் என போலீசில் புகார் கொடுக்காமல் ஒதுங்கியிருந்தேன். பத்திரிகையில் செகாநாத் விவகாரம் வெளி வந்ததால், என்னைப் போன்று வேறு யாரும் இனிமேல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, புகார்கொடுத்துள்ளேன். செக்ஸ் வெறி பிடித்த செகாநாத், ஆடம்பரமாக வாழ வேண்டுமென்ற ஆசையில் திருமண பந்தத்தை கொச்சைப்படுத்தி விட்டார். 4 சவரன், 1.85 லட்சம் ரூபாய் அவருக்காக செலவு செய்துள்ளேன். இவ்வாறு, மணிகண்டன் கூறினார்.

ஏமாந்த கால்பந்து வீரர்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னா, கூறியதாவது: சென்னை வேப்பேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 2006ம் ஆண்டு செகாநாத்தை சந்தித்தேன். பணம் பெறும் பிரிவில் இருந்தார். என்னுடைய மொபைல் போன் எண்ணிற்கு அடிக்கடி பேசினார். என்னைக் காதலிப்பதாகக் கூறினார். நான் முதலில் சம்மதிக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறினார். கால்பந்து வீரரான நான், விளையாட்டில் கவனம் செலுத்தியதால், அவரிடம் மாட்டிக் கொள்ளவில்லை.இந்தாண்டு ஜனவரி மாதம் டூவீலரில் சென்ற செகாநாத்தை எதேச்சையாக சந்தித்தேன். என்னிடம் அவர், "உனக்காகத் தான் இத்தனை ஆண்டுகள் காத்திருக்கிறேன். என்னைத் திருமணம் செய்யா விட்டால் உயிரை விட்டு விடுவேன்' எனக்கூறி, அவரது கையில் கத்தியால் கீறிக் கொண்டார்.அதன் பிறகு தான் அவரை காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு எல்லையம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டேன். புளியந்தோப்பில் உள்ள எனது வீட்டில் என்னுடன் 5 மாதம் வாழ்ந்தார்.கணவன், மனைவியாக அன்யோன்யமாக வாழ்ந்தோம். அசைவ

Advertisement

உணவுகளை விரும்பிச் சாப்பிடுவார். மொத்தத்தில் அவர் மீது சந்தேகமே வரவில்லை. ஜாலியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். திருமணமான பெண்கள் இளம் வயதில் அப்படித்தான் இருப்பார்கள் என நினைத்து நானும், அவரது ஆசைகளுக்கு ஈடு கொடுத்து வாழ்ந்தேன். நான் குடியிருந்த தெருவிற்கு அருகேயுள்ள தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்.அவருக்கும், செகாநாத்துக்கும் கடந்த 2006 ல் திருமணம் நடந்த தகவல் எனக்கு கிடைத்தது. புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் சுரேஷ், புகார் கொடுத்தார். மகளிர் போலீசார் என்னை அழைத்து விசாரித்தனர். போலீஸ் நிலையத்திற்கு வந்த செகாநாத், "எனது கணவர் பிரசன்னா தான். சுரேஷ் என்பவரை யாரென்றே தெரியாது' எனக்கூறினார். அதிர்ச்சியடைந்த சுரேஷ், செகாநாத்திடம், "நமக்குத் திருமணம் நடந்த பிறகு, வீட்டுவசதிவாரிய குடியிருப்பில் வசித்ததை மறந்து விட்டாயா. அந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகளை கட்டும் வரை குடிசை வீட்டில் இருந்தபோது, ஏற்பட்ட தீ விபத்தில் நம் திருமண போட்டோக்கள் எரிந்து விட்டன' என கூறினார்.அப்போது மூன்று பேரிடமும் எழுதி வாங்கிய புளியந்தோப்பு மகளிர் போலீசார், செகாநாத்தை எச்சரித்து அனுப்பினர். வீட்டில் இருக்க முடியாது என கூறி வெளியேறிய செகாநாத், மகளிர் விடுதியில் தங்கியிருந்தார். திடீரென ஒரு நாள் வந்து 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என, கூறினார்.செகாநாத்தின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க ஆரம்பித்தபோது தான், அவருக்குப் பல வாலிபர்களுடன் திருமணம் நடந்த விஷயம் எனக்குத் தெரிய வந்தது. அவரை உண்மையாகக் காதலித்த என்னை ஏமாற்றி விட்டார். அவருக்காக 1.50 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். இனிமேல், அவர் அப்பாவி வாலிபர்களை ஏமாற்றாத வகையில் போலீசாரின் நடவடிக்கை இருக்க வேண்டும். செகாநாத் மீது திருவொற்றியூர், புளியந்தோப்பு, வேப்பேரி, வேளச்சேரி உட்பட சென்னை நகரில் பல்வேறு போலீஸ் நிலையத்தில் புகார் மனுக்கள் நிலுவையில் உள்ளன. அப்புகார் மனுக்களை அலட்சியப்படுத்தாமல் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால், என்னைப் போன்ற அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கை திசை மாறி இருக்காது.இவ்வாறு, பிரசன்னா கண் கலங்கினார்.

பார் கவுன்சிலில் செகாநாத் மீது புகார்:திருவொற்றியூரை சேர்ந்த சரவணனிடம், வழக்கறிஞருக்கு படிப்பதாகக் கூறி பணத்தை செகாநாத் கறந்துள்ளார். இது குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்த சரவணன், அவரது வழக்கறிஞர் மூலம் சென்னை ஐகோர்ட் பார் கவுன்சிலில், "வழக்கறிஞர் பெயரைச் சொல்லி மோசடி செய்து வரும் செகாநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகார் கொடுத்துள்ளார்.

கமிஷனர் திரிபாதி அதிரடி காட்டுவாரா?சென்னை நகரில் பல போலீஸ் நிலையங்களில் மோசடி பெண் செகாநாத் மீது புகார்கள் பதிவாகி இருப்பதாகத் தெரிகிறது. செகாநாத் மீது புகார் கொடுக்கச் சென்ற வாலிபர்களிடம் போலீசார், "அப்பெண்ணை நாங்கள் எங்கே போய் தேடுவோம். நீங்கள் பிடித்துக் கொடுங்கள். நாங்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம்' என கூறி தட்டிக் கழித்துள்ளனர். செக்ஸ் வெறி பிடித்து அப்பாவி இளைஞர்களை திருமண ஆசையில் வீழ்த்திய பெண்ணைக் கைது செய்ய கமிஷனர் திரிபாதி தனிப்படை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை, ஏமாந்த வாலிபர்கள் எழுப்பியுள்ளனர். பல்வேறு போலீஸ் நிலையத்தில் உள்ள புகார் மனுக்களை எல்லாம், ஒன்றாகச் சேர்த்து மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (128)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh - tiruvannamalai,இந்தியா
24-மே-201308:47:38 IST Report Abuse
suresh நல்லது
Rate this:
Share this comment
Cancel
suresh - tiruvannamalai,இந்தியா
24-மே-201308:38:52 IST Report Abuse
suresh எனக்கு ஒரு வாய்பு கிடிக்கவில்லயெஅ ?????????????????????
Rate this:
Share this comment
Cancel
R. SAMUEL - Panchkula,இந்தியா
18-மே-201308:31:20 IST Report Abuse
R. SAMUEL இந்தியாவில் அதிகம் ஏமாறுபவர்கள் தமிழர்கள் என்பதற்கு ஒரு உதாரணம்
Rate this:
Share this comment
Cancel
P.n. Alagarasu Natesan - Tiruvottiyur,இந்தியா
14-மே-201311:20:57 IST Report Abuse
P.n. Alagarasu Natesan இதுதான் சம உரிமையோ. பெண்ணினத்துக்கே பெரிய அவமானம். ஏமாறுபவன் இருக்கும் வரை இப்படித்தான் நடக்கும். ஒன்னும் செய்யமுடியாது.
Rate this:
Share this comment
Cancel
RATHINAM.NN - TIRUPUR,இந்தியா
11-மே-201314:31:45 IST Report Abuse
RATHINAM.NN வடிவேல் சொல்லற மாதிரி, ம்மா உனக்கு இந்த ஆள் எத்தினியாவது என்பதற்கு அவள் ஏழாவது என்று பதில் சொல்வாள். அந்த கதை மாதிரியே இருக்குது. அம்ம்மம்மா இந்த பூமி தாங்காது.
Rate this:
Share this comment
Cancel
Krishnamoorthy perumal - madurai,இந்தியா
10-மே-201312:19:01 IST Report Abuse
Krishnamoorthy perumal கேரளத்திற்கு வெளியே, மலையாளிகள் என்ன தவறுகள் செய்தாலும் ,யார் செய்தாலும் கேரள அரசும் மற்றும் மத்திய அரசு மந்திரிக்ளும், உயர் அதிகாரிகளும் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு தரும். மலையாளிகளை முன்பு மாதிரி எடை போடமுடியாது. இப்போது அவர்கள் பணம் காய்ச்சி மரங்கள் . கேரளாவில் ஆயிரம் கட்சிகள், மதங்கள் இருந்தாலும் , ஒரு மலயாளிக்கு கஷ்டம் என்று வந்து விட்டால் அத்தனை மலையாளிகளும் ஒன்று கூடி குரல் எழுப்புவர். இதை பார்த்தாவது நம்ம ஊர் தி.மு.க., அ.தி.மு.க., வினர் பாடம் கற்று கொள்ளவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Saravana Prasath Natarajan - Chennai,இந்தியா
10-மே-201309:58:52 IST Report Abuse
Saravana Prasath Natarajan பல காதல் இன்று இந்த நிலையில் தான் உள்ளது. உடலுறவு மட்டுமே இவர்களின் எண்ணம். மனைவி குழந்தை போன்ற அருமையான பந்தம் பல நேரங்களில் நிச்சயிக்க பட்ட திருமணத்திலும் ஒரு சில நேரங்களில் காதல் திருமணத்திலும் உள்ளது. "சில" என்ற வார்த்தையை விட "பல" என்ற வார்த்தையை தேர்ந்தேடுப்பபவர்கள் புத்திசாலி ஆகின்றனர் காதல் திருமணத்தால் ஜாதி ஒழியும் நல்ல சிந்தனை ஆனால் விவாகரத்து ஒழியுமா? பல பத்திரிகைகள் காதலித்து வாழ்ந்து சலித்து விவாகரத்து செய்கிறார்கள் என்று பல கோணங்களில் அலசி தகவல்களை வெளியிடுகிறார்கள். பல இளைங்கர்கள் இன்று நகர் புற பெண்கள் வேண்டாம் கிராமப்புற பெண்கள் தான் திருமணதிற்கு தகுந்தவள் என்று சொல்கிறார்களே அது ஏன்? நகர் புறத்தில் அந்த அளவு காதலின் வேகம் பாய்ந்து அது கலவியில் முடிந்து அடுத்த ஆணுடன் காதலாக மாறுகிறது. மிருகங்கள் இனபெருக்கம் செய்ய பல பெண் மிருகங்களுடன் இணையும், அது போல் பல பெண்களும் ஆண்களும் வாழ்கின்றனர். உடலுறவில் சுகம் பெரும் ஜீவராசிகள் மனிதர்களும், திமிங்கலமும் தான். உடலுறவை சரியான முறையில் கையாளுங்கள் இல்லையேல் உங்கள் வாழ்கையில் ஏதோ ஒரு இடத்தில் சிறு தவறு செய்வீர்கள் அது உங்கள் உயிருக்கே எமனாக வந்து சேரும். உயிர் பிரிவது மட்டும் இன்றி அவமா பட்டு இறப்பீர்கள் நீங்கள் இறந்த பின்னரும் உங்கள் குடும்பம் அந்த அவமானத்தை சுமக்கும்
Rate this:
Share this comment
Cancel
Bharathi Raja - salem,இந்தியா
09-மே-201311:23:00 IST Report Abuse
Bharathi Raja என்ன கொடு சார் இது ...............................................
Rate this:
Share this comment
Cancel
amalan div - sivagangai,இந்தியா
06-மே-201312:57:43 IST Report Abuse
amalan div இவள் பெண் இனத்திற்கே கேவலம் இவளை கடுமையாக மற்றும் வன்மையாக கண்டிக்கவும் . இல்லையேல் பெண் வர்க்கத்திற்கே அசிங்கம்
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
06-மே-201304:22:13 IST Report Abuse
arabuthamilan சினிமா மோகத்திலிருக்கும் நம் பயல்கள் திருந்தாதவரை இப்படிப்பட்ட அலங்கோல கூத்துகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கும். நம் இளைஞர்கள் முதலில் விவிலியத்திலுள்ள (HOLY பைபிள்) நீதிமொழிகள் பகுதியை தினந்தோறும் படிக்க வேண்டும். எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள் என்பதைப் பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X