பின்லாடன் என்கவுன்டர் சம்பவம் புத்தகமாக வெளிவருகிறது

Updated : ஆக 23, 2012 | Added : ஆக 23, 2012
Share
Advertisement

நியூயார்க்:பாகிஸ்தானில் பின்லாடன் சுட்டுக்கொல்லப்பட்ட போது , அமெரி்க்கப்படைகள் நடத்திய வேட்டை குறித்த புத்தம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. இதனை அமெரிக்கப்படையில் பணியாற்றிய ராணுவ வீரர் ஒருவர் எழுதியுள்ளார்.

‌அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமாக அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன்,கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த போது அமெரிக்கப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
அமெரிக்காவின் நேவீ- சீல் என்ற படையினர் தான் பின்லாடனை நள்ளிரவில் என்கவுன்டர் செய்தனர். இது தொடர்பாக புத்தகம் விரைவில் வெளிவர உள்ளது. ‘ நோ ஈஸி டேய்ஸ் ’ என்ற பெயரில், அமெரிக்கப்படையில் பணியாற்றிய டாட்டன் என்பவர் ‘மார்க்ஓவன்’ என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார்.


இவர் தான் பின்லாடன் பதுங்கியிருந்த மாளிகையில் மூன்றாவது தளத்தில் இருந்து ,பின்லாடன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு பிணமாக கிடந்ததை முதலாவதாக பார்த்து உறுதி செய்தார். இந்நிலையில் இவர் எழுதிய புத்தகம் அடுத்த மாதம் 11-ம் தேதி, அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதன் 11-ம் ஆண்டு நினைவு நாளில் வெளியாகிறது. இதனை பென்குயின் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி பதிக்கம் வெளியிடுகிறது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X