பொது செய்தி

தமிழ்நாடு

வேகமாக பரவுகிறது மாவுப்பூச்சி, வேளாண் துறை எச்சரிக்கை

Added : ஆக 03, 2010
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த விவசாயிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.தோட்டக்கலை துறை துணை இயக்குனர் (பொறுப்பு) இக்னேஷியஸ் ரோச் கூறியதாவது:பொங்கலூர், பல்லடம், குடிமங்கலம், தாராபுரம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில், பப்பாளி பூச்சி என்ற மாவுப்பூச்சி வேகமாக பரவி வருகிறது. வேளாண் பல்கலை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த விவசாயிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.தோட்டக்கலை துறை துணை இயக்குனர் (பொறுப்பு) இக்னேஷியஸ் ரோச் கூறியதாவது:பொங்கலூர், பல்லடம், குடிமங்கலம், தாராபுரம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில், பப்பாளி பூச்சி என்ற மாவுப்பூச்சி வேகமாக பரவி வருகிறது. வேளாண் பல்கலை குழுவினர், வெள்ளகோவில் பகுதியில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்காக வேளாண் பல்கலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இவ்வகை பூச்சிகள் காற்று மற்றும் நீர் வழியாக 300 வகை தாவர இனங்களை வேகமாக தாக்கி அழிக்கக்கூடியது.பஞ்சு போன்ற உடல் அமைப்பு தாவரங்களின் சத்தை எடுத்துக் கொள்கிறது. மழைக்காலத்தில் கட்டுப்படுகிறது; வெயில் காலத்தில் வேகமாக பரவுகிறது. ஆண் பூச்சி இல்லாமல்,  பெண் பூச்சிகள் முட்டையிடும் தன்மை பெற்றுள்ளன; ஒரு முறை 300 முட்டை வரை இடக்கூடியவை. நோய் தாக்குதலை துவக்க நிலையில் கண்டு, அழித்து விட வேண்டும். பார்த்தீனியா உள்ளிட்ட களை செடிகளையும் தாக்குகின்றன. தோட்டத்தைச் சுற்றி, களை  இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 20 மி.லி., நீம் ஆயில் அல்லது வேப்பங்கொட்டை சாறு 50 மி.லி., அல்லது மீன் எண்ணெய் ரெசின்கேன் 25 கிராம் கலந்து தெளிக்க வேண்டும். கட்டுப்படும் வரை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பது அவசியம்.அதிகளவில் தாக்குதல் ஏற்படும்போது, பியோரோகுரோன், ட்ரஸ்பான், ரோகார், அசிடேட் உள் ளிட்ட மருந்துகளை இரண்டு மி.லி., அளவு ஒரு லிட் டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். வெர்டிசீலி யம், பிவேரியா பூஞ்சான்மைகளையும் பயன் படுத் தலாம். விவசாயிகள் விழிப்புணர்வுடன் செயல் பட்டு, பயிர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, இக்னேஷியஸ் ரோச் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X