பிரதமர் பதவி விலக கோரி 8-ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் : பா.ஜ,

Updated : செப் 01, 2012 | Added : செப் 01, 2012 | கருத்துகள் (2)
Share
Advertisement

ஐதராபாத்:நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் பிரதமர் மன்மோகன்சிங்கை பதவிவிலக வலியுறுத்தி செப்டம்பர் 8-ம் தேதிநாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ. திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக பா.ஜ. தேசிய பொதுச்செயலர் ஆனந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் நடந்த முறைகேட்டிற்கு பிரதமர் மன்மோன்சிங் தான் பொறுப்பு அவர் பதவி விலக மறுக்கிறார். நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் ரூ. 1.86 லட்சம் கோடி ஊழல் நடந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று, பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகிட கோரியும், 142 சுரங்கங்களுக்கு அனுமதியளித்தை திரும்ப பெற வலியுறுத்தியும், வரும் 8-ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் பா.ஜ. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணிகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
தற்போது நடந்து வரும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 7-ம் தேதி நிறைவடைகிறது. அதன்பின்னர் பா.ஜ. தனது நாடு தழுவிய போராட்டத்தை துவக்குகிறது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bala a - chennai,இந்தியா
01-செப்-201207:07:58 IST Report Abuse
bala a சரியாய் போச்சு அதுவும் 8 தேதி சனிகிழமை உருபட்டா போலத்தான் . முதல் கோணல் முற்றும் கோணல் நீங்களும் டிசைன் டிசைன்ஆ போராட முயற்ச்சி பன்ரின்கே தலைமை யாரு எடியுரப்ப தானே .
Rate this:
Cancel
Namachivayam Paramasivam - thanjavur,இந்தியா
01-செப்-201203:42:24 IST Report Abuse
Namachivayam Paramasivam எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் சரி, தமிழ் மக்களாக இருந்தாலும் சரி, தமிழக முதல்வராக இருந்தாலும் சரி, இத்தாலி சோனியாவைத் தவிர யார் பேச்சும்,யாருடை கதறலும் அவர் காதில் விழாது. அவர்தான் காதை மறைத்து டர்பன் கட்டியிருக்கிறாரே. காங்கிரஸ் திருடர்களின் நோக்கம் இந்த நாட்டை சுரண்டி சோனியாவும் அவர்களுடைய குடும்பமும் இத்தாலியில் செட்டில் ஆகவேண்டும். தமிழ்நாட்டு மீனவர்கள் 565 இலங்கை கடற்படையால் தாக்கி கொல்லப்பட்டும்கூட இலங்கை நட்பு நாடு என்று ஒரு மத்திய அமைச்சர் சொல்கிறார் என்றால் இந்த காங்கிரஸ் தமிழ் நாட்டுக்கு தேவையில்லை . எனவே 2014 தேர்தலில் காங்கிரசை இந்த நாட்டை விட்டே அகற்ற வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X