செப்.,11ல் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி முகாம்| district news | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செப்.,11ல் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி முகாம்

Added : செப் 06, 2012
Share
நாமக்கல்: "நாமக்கல் வேளாண் அறிவில் நிலையத்தில், வரும், 11ம் தேதி, மண்புழு உரம் தயாரிக்கும் முறை குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது' என, ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 11ம் தேதி, மண்புழு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் எனும் தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம்

நாமக்கல்: "நாமக்கல் வேளாண் அறிவில் நிலையத்தில், வரும், 11ம் தேதி, மண்புழு உரம் தயாரிக்கும் முறை குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது' என, ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 11ம் தேதி, மண்புழு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் எனும் தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது. பயிற்சியில், மண்புழு உரம் தேர்வு செய்தல், தொட்டி முறை, குவியல் முறை மண்புழு உரம் தயார் செய்தல், கோழிக் கழிவில் இருந்து மண்புழு உரம் தயார் செய்தல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியில், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், வரும், 10ம் தேதிக்குள், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரிலோ அல்லது, 04286-266345, 266244 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X