பொது செய்தி

தமிழ்நாடு

6 அம்ச திட்டத்தை செயல்படுத்த ஹசாரே முடிவு

Updated : செப் 07, 2012 | Added : செப் 07, 2012
Share
Advertisement

மும்பை: அரசியல் கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தை கைவிட்ட அன்னாஹசாரே அதற்கு பதிலாக 6 அம்ச தி்ட்டத்தை அறிவித்துள்ளார். மேலும் இதனை முழு வீச்சில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளார். இதன்படி தேர்தலில் நேர்மையானவர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் இளைஞர்கள் முன்வர வேண்டும். தேர்தலின் போது 90 சதவீத வாக்குகள் பதிவு பெறச்செய்ய வேண்டும். இதற்கான முயற்சியில் இறங்க போவதாக கூறிய அவர் அரசியல் கட்சி துவக்கும் எண்ணம் இல்லை என கூறினார். மேலும் தேர்தலில் நேர்மையானவர்களை ‌ தேர்ந்தெடுத்தல், கிராம பஞ்‌.,களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குதல், அரசு வேலைகளில் ஏற்படும் தாமதங்களை தவிர்க்க முயற்சி செய்தல், போலீசாரை லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்பின் கொண்டு வருதல் , தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை நிராகரிக்கும் உரிமை உட்பட 6 அம்ச திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X