அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிலக்கரி ஊழலில் ஜெகத்ரட்சகன் குடும்பத்துக்கும் தொடர்பா..

Updated : செப் 09, 2012 | Added : செப் 07, 2012 | கருத்துகள் (68)
Share
Advertisement

சென்னை: நிலக்கரி ஊழல், கடந்த சில நாட்களாக நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த ஊழலில், தி.மு.க.,வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், நடத்திய கம்பெனியும் ஆதாயம் பெற்றுள்ளது, என்று புகார் எழுந்துள்ளது. இப்பிரச்னையை, நேற்று, பார்லிமென்ட்டில் எழுப்பி அ.தி.மு.க.,வினர் கூச்சலிட்டனர். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், முறைகேடு நடந்துள்ளதாக சி.ஏ.ஜி., அறிக்கை வெளியானதிலிருந்து, மத்திய அரசுடன், பாரதிய ஜனதா கட்சியினர் மோதி வருகின்றனர். இதன் காரணமாக, பார்லிமென்டின் மழைக் கால கூட்டத் தொடர் முழுவதும் வீணடிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஊழலில், ஐ.மு., கூட்டணியின் பிரதான கட்சியான தி.மு.க.,வைச் சேர்ந்த இணை அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கும் தொடர்பு இருப்பதாக வந்த தகவலால், பா.ஜ.,வின் போராட்டத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. இதில், அ.தி.மு.க.,வின் ஆதரவு, கேட்காமலே கிடைத்துள்ளது. ஏற்கனவே, "ஸ்பெக்ட்ரம்' ஊழலில் சிக்கித் தவிக்கும் தி.மு.க.,வுக்கு, நிலக்கரி ஊழலும் பெரும் தலைவலியை கொடுக்க துவங்கியுள்ளது. "2ஜி' ஊழலில், தொலைத் தொடர்புத் துறையில் அனுபவமே இல்லாத நிறுவனங்கள், "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு பெற்று, வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இப்போதும், கிட்டத்தட்ட அதே பாணியில்தான், நிலக்கரி ஒதுக்கீட்டிலும் நடந்துள்ளது என, கூறப்படுகிறது.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர், ஜெகத்ரட்சகனின் குடும்பத்தார் நடத்தும் ஜெ.ஆர்., மின் உற்பத்தி நிறுவனம், நிலக்கரி ஒதுக்கீட்டைப் பெற்று, மற்றொரு நிறுவனத்துக்கு விற்று லாபம் பார்த்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.


நடந்தது என்ன?

அதாவது, நிலக்கரி ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு, ஐந்து நாட்களுக்கு முன் தான், ஜெகத்ரட்சகன் குடும்பத்திற்கு சொந்தமான, ஜெ.ஆர்., மின் உற்பத்தி நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு, அதற்கு முன் மின் உற்பத்தி தொழிலில் அனுபவம் எதுவும் இல்லை. இப்படியிருக்கும்போது, ஒரு நிறுவனம் துவங்கி, ஐந்து நாட்களே ஆன நிலையில், நிலக்கரி ஒதுக்கீட்டைப் எப்படிப் பெற்றது என்பது தான், இப்போது பிரச்னைக்கு முக்கிய காரணம். தமிழக எம்.பி.,களில், பெரும் பணக்காராக இருக்கும் ஜெகத்ரட்சகன் குடும்பத்தாரின், ஜெ.ஆர்., பவர் ஜென் நிறுவனம், நிலக்கரி சுரங்கத் தொழிலே செய்யாமல் பலனடைந்துள்ள விவரம் அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.


துவக்கம் எப்படி?

ஜெகத்ரட்சகன் மற்றும் அவர் குடும்பத்தார் இயக்குனர்களாக இருக்கும், "ஜெ.ஆர்., பவர் ஜென் பிரைவேட் லிமிடெட்' புதுச்சேரி தொழில் மேம்பாடு மற்றும் முதலீட்டு கழகத்துடன், கடந்த 2007ம் ஆண்டு, ஜனவரி 17ம் தேதி தொழில் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிறுவனத்துக்கு, புதுச்சேரி தொழில் மேம்பாட்டுக் கழகம் மற்றும் குஜராத் கனிம மேம்பாட்டுக் கழகம் ஆகியன, ஒடிசா மாநிலம் நைனி சுரங்கத்தில், நிலக்கரி ஒதுக்கீட்டை, 2007ம் ஆண்டு, ஜூலை 25ம் தேதி வழங்கியுள்ளன. மின் உற்பத்தியில் எவ்வித அனுபவமும் இல்லாத, ஜெ.ஆர்., பவர் ஜென் நிறுவனத்தின், சொத்து மதிப்பு, நிலக்கரி ஒதுக்கீடு பெற்ற பிறகு, அதிகரித்துள்ளது. இதையடுத்து, கடந்த 2010ம் ஆண்டு, இந்நிறுவனத்தின் 51 சதவீத பங்கை, ஐதராபாத்தைச் சார்ந்த "கே.எஸ்.கே. எனர்ஜி வென்டர்ஸ்' நிறுவனத்துக்கு விற்றுள்ளது. நிலக்கரி ஒதுக்கீடு பெறுபவர்கள், அதைக்கொண்டு மின் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பிற துறைகளில் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆனால், இத்துறைகளில் எவ்வித அனுபவமும் இல்லாத, ஜெ.ஆர்., பவர் நிறுவனம், நிலக்கரி ஒதுக்கீட்டைப் பெற்று, அதன் மூலம் பங்கை விற்று லாபம் அடைந்துள்ளது. மேலும், ஒதுக்கீட்டை பெற்று, ஐந்து ஆண்டுகளாக எவ்வித பணியும் மேற்கொள்ளப்படவில்லை. மின் உற்பத்தியும் துவக்கப்படவில்லை. இது பற்றி ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிரச்னையை கிளப்பினார். முறைகேடாக வழங்கப்பட்ட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். நிலக்கரி ஒதுக்கீட்டில், 51 சதவீதத்தை விற்றுள்ள ஜெ.ஆர்., பவர் ஜென் நிறுவனத்திடம், இன்னும் 49 சதவீத ஒதுக்கீடு உள்ளது. இதை விற்று, மேலும் பலனடையலாம் எனக் கூறுகின்றனர். இதற்கிடையே, ஒதுக்கீட்டின் படி, நிலக்கரியை பயன்படுத்தாத நிலையில், ஒதுக்கீட்டை ஏன் ரத்து செய்யவில்லை என, புதுச்சேரி அரசுக்கு, நிலக்கரி அமைச்சகம் கடந்த மே மாதம், "நோட்டீஸ்' அனுப்பியுள்ளது குறிப்பிடத் தக்கது.


ஜெகத்ரட்சகன் சொல்வது என்ன:

பிரச்னை தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ள நிலையில், இது குறித்து, கருத்து தெரிவித்த ஜெகத்ரட்சகன் கூறியதாவது: புதுச்சேரி அரசின், துணை ஒப்பந்ததாராக இருந்து, நிலக்கரி ஒதுக்கீட்டைப் பெற்று, கே.எஸ்.கே., என்ற நிறுவனத்துக்கு விற்றுள்ளோம். புதுச்சேரி அரசு, நிலக்கரி ஒதுக்கீட்டை திரும்பப் பெற்றுக் கொண்டதால், இதன்பின் எந்த பரிவர்த்தனையிலும், ஜெ.ஆர்., பவர் நிறுவனம் ஈடுபடவில்லை. இந்த தொழில் நடவடிக்கைகள் எல்லாம் நான் எம்.பி., ஆகவோ, மத்திய அமைச்சராகவோ இல்லாத காலத்தில் நடந்தவை. என்னுடைய அமைச்சர் பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி, எந்த ஒதுக்கீட்டையும் பெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இக்குற்றச்சாட்டு குறித்து. தி.மு.க.,வின் - எம்.பி.,யும், செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், "நிலக்கரி ஒதுக்கீடு பெற்ற காலக்கட்டங்களில், ஜெகத்ரட்சகன் தி.மு.க.,வின் உறுப்பினராகக் கூட இல்லை. மேலும், அவரது அமைச்சர் பதவியை பயன்படுத்தி பலனடைந்தார் என எந்தக் குற்றச்சாட்டுமில்லை' என்றார்.

இந்த விஷயத்தில், அதிகாரத்தை பயன்படுத்தி ஒதுக்கீடு பெறவில்லை என அமைச்சர் சொல்லி வரும் நிலையில், நிலக்கரி ஊழலில் இவரது குடும்பத்தாரின் பங்கு உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தார்மீக அடிப்படையில், அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தர்மசங்கடத்தில் சிக்கியுள்ள தி.மு.க.,வும், எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க ஜெகத்ரட்சகனை பதவி விலக கேட்டுக்கொள்ளும் என தெரிகிறது. இப்பிரச்னையை, அ.தி.மு.க.,வினர், நேற்று பார்லிமென்டில் கிளப்பினர்.

ஏற்கனவே நிலக்கரியால் பார்லிமென்ட் முடங்கிப்போன நிலையில், கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்றும், சபை நடைபெறவில்லை. எனவே, அ.தி.மு.க., - எம்.பி.,க்களால் கூச்சல் மட்டுமே போட முடிந்தது. "ஜெகத்ரட்சகனை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது' என, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - kerala,இந்தியா
08-செப்-201221:49:08 IST Report Abuse
rajan ராசா ரெண்டு திராவிட கட்சில இருந்து அடிச்சு மாத்தி கடைசில சிக்கிட்டியே. எல்லாம் இந்த பகுத்தறிவாளி கொடுத்த பாடம். கர்ம வினை யாரையும் விடாது ராசா.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
08-செப்-201219:34:09 IST Report Abuse
Natarajan Ramanathan ஊழல் செய்தால்தான் திமுகவில் சேர்த்துக்கொள்வார்கள். அல்லது திமுகவில் சேர்ந்தால் ஊழல் செய்யவேண்டும். நல்ல லாஜிக்.
Rate this:
Cancel
vramanujam - trichy,இந்தியா
08-செப்-201219:16:02 IST Report Abuse
vramanujam ஊழலே நடை பெறவில்லை. இவர் மட்டும் எப்படி செய்திருக்க முடியும் ?திமுக வுக்கும் ஊழலுக்கும் துளி கூட சம்பந்தம் இல்லாதவர்கள். தமிழர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் ஒரே தலைவரை கொண்டு தன்னலம் பார்க்காமல் ஊருக்கு உழைக்கும் தொண்டர்களையும் கொண்ட ஒரே ஒரு கட்சி திமுக்க ..வாழ்க அவர்களின் தொண்டு .
Rate this:
Meow - Madurai,இந்தியா
09-செப்-201214:19:19 IST Report Abuse
Meowதிமுக தலைவர் ஆட்சியில் இருந்த போது இலங்கை தமிழர்களுக்கு ரொம்ப செய்தார். இவரெல்லாம் ஒரு தலைவரா? இலங்கை தமிழர் பிரச்சநை நடந்த பொழுது பிரதமருக்கு கடிதம் எழுதியவர் அழகிரி பதவி விஷயமாக பிரதமரை நேரில் சென்று பார்த்து பேசிய நல்லவர். ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X