பொது செய்தி

தமிழ்நாடு

நம்மை பற்றி அறிவதே உண்மை அறிவு:துணைவேந்தர் சேது சுடலை முத்து பேச்சு

Added : செப் 21, 2012
Advertisement

காரைக்குடி:காரைக்குடி கோவிலூர் மடாலய நாச்சியப்ப சுவாமிகள் குருபூஜை துவக்க விழா, ஆண்டவர் கலையரங்கில் நடந்தது. மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் தலைமை வகித்தார்.அழகப்பா பல்கலை துணைவேந்தர் சேது சுடலை முத்து பேசியதாவது: ஆகமங்கள் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது என்பது பற்றி சொல்லித்தருபவை. வேதாந்த உண்மைகளை, வடமொழி பயிற்சி இல்லாத தமிழர்கள், அறிந்து கொள்ள வேண்டும், என்ற சீரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட முதல் திருமடம், கோவிலூர் மடம்.
புண்ணியம் செய்தவர்களை பற்றி, எண்ணுவதாலும், பேசுவதாலும், கேட்பதாலும், நமக்கும் அவர்கள் செய்த, புண்ணியத்தில் பங்கு கிடைக்கின்றது. அதுவே குருபூஜை செய்வதின் நோக்கம் ஆகும். "கு' என்பது இருட்டை குறிக்கும். "ரு' என்பது நீக்குவது என்று பொருள்பட, குரு என்றால், இருட்டை நீக்குபவர் என்று பொருள் உண்டாகிறது.
"குரு' என்பவர் பழுக்காத வாழைப்பழத்தாரில் உள்ள, ஒரு பழுத்த பழத்தோடு ஒப்பிடப்படுகிறார். இந்த பழுத்த பழத்தின் அண்மையே, ஏனைய காய்களை பழுக்க வைத்துவிடும்.கற்றோருக்கு கண்கள் இரண்டோடு, கல்வியும் சேர்த்து மூன்று விழியாகிறது. ஈகை புரிவோருக்கு நகக்கண்கள் சேர்த்து, ஏழு கண்கள் ஆகின்றது. ஞானிகள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள். ஆதலால் அவர்களுக்கு கண்கள் எண்ணிலடங்காதவை. அவ்வாறு பன்முகப் பார்வை கொண்டவர் நாச்சியப்ப சுவாமிகள்.நாம் இன்னும், அறியாமையில்தான் இருக்கிறோம். விஞ்ஞானம், கலை, கல்வி என்று பல விஷயங்களை அறிந்திருக்கலாம். ஆனால் இவை சில தகவல்களே, தவிர உண்மை அறிவு ஆகாது. நம்மைப் பற்றிய அறிவே உண்மையான அறிவு ஆகும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X