கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மனைவி கொலை வழக்கில் கைதான கணவன் விடுதலை: மகளிர் கோர்ட் உத்தரவு

Added : செப் 22, 2012
Share
Advertisement

சென்னை: மனைவி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட கணவனை, சென்னை, மகளிர் கோர்ட் விடுதலை செய்துள்ளது.


பிரச்னை: சென்னை, ஐஸ் அவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன்,32. இவருக்கும், ரம்ஜான் பீவி,19, என்பவருக்கும், 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆதம்பாக்கத்தில் வசித்து வந்தனர். மனைவிக்கு, வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக, ஜாகீர் உசேன் சந்தேகப்பட்டு உள்ளார். இதனால், இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு உள்ளது. மனநிலை பாதிக்கப்பட்ட ஜாகீர் உசேன், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளார். பின், ஐஸ் அவுஸ் பகுதியில், தனிக் குடித்தனம் வந்தனர். 2006ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி, வீட்டில், ரம்ஜான் பீவி, கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தார்.


வழக்குப்பதிவு: மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக, ஜாகீர் உசேன் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை, சென்னை, மகளிர் கோர்ட் நீதிபதி மீனா சதீஷ் விசாரித்தார். குற்றம் சாட்டப்பட்ட ஜாகீர் உசேன் சார்பில், வழக்கறிஞர்கள் என்.ஆனந்தன், எஸ்.என்.அருண்குமார், ஆஜராகினர்.


நீதிபதி மீனா சதீஷ் பிறப்பித்த உத்தரவு: தீவிர மனநோயால் ஜாகீர் உசேன் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், 14 மாதங்கள் தொடர் சிகிச்சையில் இருந்ததாகவும், மனநல மருத்துவர் சாட்சியம் அளித்துள்ளார். சம்பவம் நடந்த காலக்கட்டத்தில், மனச்சிதைவு நோய் மிகவும் முற்றிய நிலையில் இருந்துள்ளார் என, ஜாகீர் உசேன் தரப்பில் தெளிவாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.


சாட்சி இல்லை: மனைவியைக் கொலை செய்தார் என்பதற்கு, அரசு தரப்பில், சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட வில்லை. சம்பவ காலத்தில் அவர், மனநோய் முற்றிய நிலையில் இருந்துள்ளார்; மருத்துவர் மற்றும் மருத்துவ ஆவணக் குறிப்புகள் மூலம் இது தெளிவாகிறது. குற்றச்சாட்டுக்கள், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட வில்லை. எனவே, ஜாகீர் உசேனை விடுதலை செய்ய உத்தரவிடுகிறேன். இவ்வாறு நீதிபதி மீனா சதீஷ் உத்தரவிட்டு உள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X