கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் கட்டண உயர்வு:மாநகராட்சிக்கு கோர்ட் தடை

Added : செப் 23, 2012 | கருத்துகள் (1)
Share
Advertisement

மதுரை:மதுரை மாநகராட்சியின் வீட்டு குடிநீர் கட்டணஉயர்வுக்கு நுகர்வோர் கோர்ட் தடை விதித்துள்ளது.மதுரை நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை பொதுச்செயலர் ஜி.ராமமூர்த்தி தாக்கல் செய்த மனு: நுகர்வோருக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதாக உறுதியளித்து, ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் இணைப்பை மாநகராட்சி வழங்கியுள்ளது. இதற்காக டெபாசிட்டும், குடிநீர் விநியோகத்திற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. நுகர்வோருக்கு தினமும் குறைந்தது 750 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். தடங்கல் இன்றி குடிநீர் வழங்கினால் மட்டுமே கட்டணம் வசூலிக்க மாநகராட்சிக்கு உரிமை உண்டு. விநியோகிக்கப்பட்ட தண்ணீருக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் குடிநீர் தானாக குழாயில் வருவதில்லை. பைப் வைத்து அடித்தால் மட்டுமே வருகிறது. போதிய அளவு வருவதில்லை. நுகர்வோரிடமிருந்து குடிநீர் கட்டணம் வசூலிக்க மாநகராட்சிக்கு உரிமை இல்லை. வராத தண்ணீருக்கு மாநகராட்சி கட்டணம் வசூல் செய்கிறது. நுகர்வோரை மேலும் துயரபடுத்த குடிநீர் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ418 லிருந்து 900 ஆக உயர்த்தியுள்ளது. அதிலும், 2010 லிருந்து உயர்த்தி வசூலிப்பது சட்டத்திற்கு புறம்பானது. மனுதாரரிடம் மாநகராட்சி குடிநீர் கட்டண உயர்வை வசூலிக்க இடைக்காலத்தடை விதிக்க வேண்டும் என, கோரப்பட்டது.மனுதாரர் சார்பில் வக்கீல் தமிழரசன் ஆஜரானார்.நுகர்வோர் கோர்ட் தலைவர் பி.தெய்வராஜ், உறுப்பினர் திலகம் உத்தரவு: மனுதாரருக்கு சரியாக குடிநீர் விநியோகம் செய்யாமல் கட்டணத்தை மாநகராட்சி உயர்த்தியுள்ளது. கட்டணம் வசூலித்த பின் மனுதாரருக்கு குடிநீர் விநியோகம் செய்வது மாநகராட்சியின் கடமை. கூடுதல் கட்டணம் செலுத்தவில்லை என்றால் இணைப்பை துண்டிப்பது தவறான செயல். மனுதாரரின் குடிநீர் இணைப்பை மாநகராட்சி துண்டிக்க இடைக்காலத்தடை விதிக்கப்படுகிறது.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - salem,இந்தியா
23-செப்-201206:22:53 IST Report Abuse
K.Sugavanam சரியான தீர்ப்பு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X