விசா காலம் முடிந்தும் நாடு திரும்பாதஇந்தியர்கள் பலர் குவைத்தில் கைது

Added : செப் 23, 2012
Share
Advertisement

துபாய்:விசா காலம் முடிந்தும் நாடு திரும்பாதோர் மற்றும் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என, 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை, குவைத் போலீசார் கைது செய்துள்ளனர்.


இது குறித்து குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி கூறியதாவது:விசா காலம் முடிந்த பின், சொந்த நாடு திரும்பாத குற்றத்துக்காகவும், திருட்டு மற்றும் போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதற்காகவும், குவைத் போலீசார், 2,100 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில், 300க்கும் மேற்பட்டோர், இந்தியாவை சேர்ந்தவர்கள்.கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடமிருந்து, 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், இந்திய தூதரகத்தில் குவிந்துள்ளன. இது தொடர்பாக, பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு, இந்திய தூதரக அதிகாரிகள் சென்று, இந்தியர் சம்பந்தப்பட்ட வழக்குகளை கவனிக்க உள்ளனர். இவர்களில் சிலர், ஏற்கனவே விடுதலையாகி இருக்கலாம் என, கருதுகிறோம்.விசாக்காலம் முடிந்த பின், நாடு திரும்பாத குற்றத்தில் கைதானவர்கள், அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். மீண்டும் அவர்கள், குவைத் வர, தடை விதிக்கப்படும்.இவ்வாறு இந்திய தூதரக அதிகாரி தெரிவித்தார்.


முன்னதாக, குவைத் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "விசாக்காலம் கடந்த பின், நாடு திரும்பாதவர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்; வெளிநாட்டவரை வேலைக்கு அமர்த்துவோர், ஊழியர் காணாமல் போனால், அது குறித்து, அமைச்சகத்துக்கு தகவல் தராவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறப்பட்டுள்ளது.



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X